வருமான வரித்துறையில் வேலை.. மாதம் 1.50 லட்சம் சம்பளம்.. டிகிரி முடித்திருந்தால் போதும்! செம வாய்ப்பு
சென்னை: வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த தீர்ப்பாயத்தில், சீனியர் பிரைவேட் செகரட்டரி மற்றும் பிரைவேட் செகரட்டரி பதவிகள் என 35 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளவும்.
வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் நாட்டின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இத்தீர்பாயம் செயல்பட்டு வருகிறது. வருமான வரி தொடர்பான வழக்குகள் இங்கு தான் கையாளப்படுகிறது. இதில், சீனியர் பிரைவேட் செகரட்டரி மற்றும் பிரைவேட் செகரட்டரி பதவிகள் என 35 பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்:
சீனியர் பிரைவேட் செகரட்டரி - 15 பணியிடங்கள்
பிரைவேட் செகரட்டரி - 20 பணியிடங்கள் என மொத்தம் 35 பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன.
கல்வி தகுதி: சீனியர் பிரைவேட் செகரட்டரி மற்றும் பிரைவேட் செகரட்டரி பதவிகள் விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும். அதோடு ஆங்கிலம் Shorthand தெரிந்து இருக்க வேண்டும். டைப்பிங் திறன் இருப்பதும் அவசியம். ஒரு நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் ஆங்கிலத்தில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: சீனியர் பிரைவேட் செகரட்டரி மற்றும் பிரைவேட் செகரட்டரி ஆகிய இரண்டு பணியிடங்களுக்குமே அதிகப்பட்ச வயது உச்ச வரம்பு 35 ஆகும். வயது வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. அதன்படி, எஸ்சி / எஸ்டி பிரிவினர் 40 ஆண்டுகள் வரையும், ஓபிசி பிரிவினர் 38 வயது வரையிலும், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?:
சீனியர் பிரைவேட் செயலர்: ரூ. 47,600 - 1,51,100
தனிப்பட்ட செயலர்: ரூ. 44,900 - 1,42,400 (Pay Level -7)
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வானது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத் ஆகிய 8 நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: மேற்கண்ட 35 பணியிடங்களுக்கும் ஆப்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தபால் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-
Deputy Registrar,
Income Tax Appellate Tribunal,
Pratishtha Bhavan,
Old Central Govt. Offices Building,
Fourth floor, 101, Maharshi Karve Marg,
Mumbai, Pin Code - 400 020.
விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://itat.gov.in/public/files/upload/1730455528-FkqpMXDf-CMS.pdf
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications