டிகிரி போதும்.. வருமான வரித்துறையில் மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் வேலை.. நல்ல சான்ஸ்
சென்னை: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் பிரைவேட் செகரட்டரி மற்றும் பிரைவேட் செகரட்டரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் நாட்டின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. வருமான வரி தொடர்பான வழக்குகளை இந்த தீர்ப்பாயம் கையாண்டு வருகிறது. இந்த தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள 35 சீனியர் பிரைவேட் செக்கரட்டரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்

பணியிடங்கள்:
சீனியர் பிரைவேட் செகரட்டரி: 15
பிரைவேட் செகரட்டரி: 20
கல்வி தகுதி: இந்த இரண்டு பணியிடங்களுக்குமே அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றால் போதும். அதோடு ஆங்கிலம் Shorthand- தெரிந்து இருக்க வேண்டும். டைப்பிங் திறனும் அவசியம். ஒரு நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் ஆங்கிலத்தில் டைப் செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: இரண்டு பணியிடங்களுக்குமே அதிகபட்ச வயது உச்ச வரம்பு 35 ஆகும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் 40 ஆண்டுகள் வரையும் ஓபிசி பிரிவினர் 38 வயது வரையிலும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் 45 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?:
சீனியர் பிரைவேட் செயலர்: ரூ. 47,600/ to 1,51,100/-,
தனிப்பட்ட செயலர்: ரூ. 44,900/ - to 1,42,400/- Pay Level-7
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஆகிய 8 நகரங்களில் எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-
Deputy Registrar,
Income Tax Appellate Tribunal,
Pratishtha Bhavan,
Old Central Govt. Offices Building,
Fourth floor, 101, Maharshi Karve Marg,
Mumbai, Pin Code - 400 020.
விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 02.11.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.12.2024
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://itat.gov.in/public/files/upload/1730455528-FkqpMXDf-CMS.pdf
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications