இன்றே கடைசி நாள்.. வருமான வரித் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்! உடனே அப்ளை பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருமான வரித்துறை, ஆய்வாளர் வரி உதவியாளர் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் ஆகிய 33 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் 34 ஆயிரத்து 800 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வருமான வரி தான் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாத வருமானம் பெறுபவர்கள் அதில் ஒரு பகுதியை வருமான வரியாக செலுத்த வேண்டும்.

jobs income tax tamil nadu

அவ்வாறு வருமான வரி செலுத்தும் நபர்களை கண்காணிக்கவும், இன்கம் டேக்ஸ் ரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொள்கிறது. வருமான வரி ஆணையர் தொடங்கி அலுவலக உதவியாளர் வரை பல்வேறு வேலை வாய்ப்புகள் வருமானவரித்துறையில் கொட்டி கிடக்கின்றன.

குறிப்பாக விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் வருமான வரித் துறையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2024 வருமான வரித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வருமான வரி ஆய்வாளர் பணிக்கு 11 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். 05.10.2024 தேதி என்று 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் 9,300 முதல் 34 ஆயிரத்து 800 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும்.

வருமான வரி உதவியாளர் பணிக்கு 11 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் விளையாட்டு துறையில் சாதித்த இளைஞர்கள் இளங்கலை பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு நிமிட நேரத்தில் எட்டு வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக 5,200 முதல் 20,200 வரை வழங்கப்படும்.

மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 11 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். வயது வரம்பு 5.10.2024 தேதியின்படி 18 வயது முதல் 27 வயது உட்பட்ட நபராக இருக்க வேண்டியது அவசியம். இவர்களுக்கு மாதம் 5,200 முதல் 20,200 வரை ஊதியம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? : வருமான வரித்துறையின் விளையாட்டு வேலைவாய்ப்பு பிரிவுக்கான தளமான https://sports.tnincometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (05.10.2024 )

தேர்வு முறை : ஆன்லைன் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு பிறகு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+