வங்கியில் வேலை.. தமிழகத்திலும் பணியிடம் இருக்கு! லட்சங்களில் சம்பளம்.. பட்டைய கிளப்புங்க
சென்னை: இந்த் பேங்க் வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரிலேஷன்ஷிப் மேனேஜர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பட்டப்படிப்பு, எம்பிஏ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியின் துணை வங்கியாக இந்த் பேங்க் உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்;
மொத்தம் 20 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.
* ரிலேஷன்ஷிப் மேனேஜர் - 10
* டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட் - 01
* செகரட்டரியல் ஆஃபிசர் - டிரெய்னி - 01
* டீலர் - Stock broking Terminals - 08
கல்வித் தகுதி:
* ரிலேஷன்ஷிப் மேலாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் அல்லது நிதிப் பிரிவில் MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும். NISM சான்றிதழ்கள் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
* டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு, கணினி அறிவியல் அல்லது விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* செக்ரட்டேரியல் ஆபிசர்-டிரெய்னி (பேக் ஆஃபீஸ்) பதவிக்கு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். NISM சான்றிதழ்கள் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
* டீலர் (பங்குத் தரகு டெர்மினல்கள்) பதவிக்கு பட்டப்படிப்புடன் NISM தகுதியும் அவசியம்.
பணி அனுபவம்
அனுபவத்தைப் பொறுத்தவரை, ரிலேஷன்ஷிப் மேலாளர் பதவிக்கு 2 ஆண்டுகள் அனுபவம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு 4 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. செக்ரட்டேரியல் ஆபிசர்-டிரெய்னி பதவிக்குக் குறைந்தபட்சம் ஒரு வருட பேக் ஆஃபீஸ் அனுபவம் விரும்பத்தக்கது.
வயது வரம்பு:
(01.01.2026 நிலவரப்படி), ரிலேஷன்ஷிப் மேலாளர் பதவிக்கு 25 முதல் 35 வயது வரை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு 26 முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். செக்ரட்டேரியல் ஆபிசர்-டிரெய்னி மற்றும் டீலர் பதவிகளுக்கு 21 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தகுதியானவர்கள்.
சம்பளம் எவ்வளவு?
* ரிலேஷன்ஷிப் மேனேஜர் - ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் (வருடத்திற்கு)
* டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட் பதவி - ரூ. 5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை.
* செக்ரட்டேரியல் ஆபிசர்-டிரெய்னி - ரூ.3.50 லட்சம்,
* டீலர்களுக்கு ரூ.4.20 லட்சம்
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களின் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இண்ட்பேங்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indbankonline.com இலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
"Head Administration,
No 480, First Floor,
Khivraj Complex I,
Anna Salai, Nandanam,
Chennai-35"
என்ற முகவரிக்கு கூரியர் அல்லது பதிவுத் தபால் மூலம் அனுப்பலாம். அல்லது, ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 25, 2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.indbankonline.com/wp-content/uploads/2026/01/WEBSITE-ADVERTISEMNT-RM-DM-SO.pdf












Click it and Unblock the Notifications