மின்வெட்டை சமாளிக்க.. வெளிச் சந்தையில் மின்சாரம் வாங்க டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்வெட்டை சமாளிக்க 4,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளது மின்சார வாரியம்.

சென்னை தொடங்கி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் அழுத்தம் சீராக இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மட்டும் கோவை பகுதியில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் சேதமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

power cut Electricity

மின் அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால், தமிழ்நாடு முழுவதும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான கருவிகள் சேதமடைந்துள்ளன. வழக்கத்தை விட மின்சாரத்தின் தேவை அதிகமாக இருப்பது தான் மின் வெட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் மின்வெட்டு நிலவுதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவில் மக்கள் மின் தடையால் தூங்க முடியாமல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவதும் போராட்டங்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகமாகி வருவதால், அதிக சுமை காரணமாக துணை மின்நிலையங்களில் உள்ள மின் மாற்றிகள் பாதிப்பு அடைவதால் மின் தடை ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மின்தடையை சமாளிக்க, மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துணை மின்நிலையங்களில் இப்போது பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்பட்டுள்ளது.

மின் தேவையை சமாளிக்க வெளிசந்தையில் குறு கால அடிப்படையில் மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. 4,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளது மின்சார வாரியம்.

அதன்படி, வரும் 12 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 4500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பீக் ஹவர் என்று அழைக்கப்படும் உச்ச நேரமான 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தேவையான 3,000 மெகாவாட் மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தேவையான 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+