பஞ்சாப் முதல்வர் அலுவலகத்திற்குள் புகுந்து அதிரடியாக சிபிஐ சோதனை.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஞ்சாப்பில் முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் பகவந் சிங் மானின் முகாம் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி மீது முறைகேடு புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் முதல்வரின் முகாம் அலுவலகம் என 8 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. முதல்வரின் முகாம் அலுவலகத்திலேயே சோதனை நடத்தப்பட்டது பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை தற்போதே ஆரம்பித்துள்ளன. இதனால், தற்போதே அரசியல் களம் மெல்ல மெல்ல சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Punjab Chief Ministers Camp office and his OSD home raided by CBI

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை

இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். முதல்வரின் சிறப்பு அதிகாரியாக உள்ள ராஸ்பிர் சிங் குமான், இடைத்தரகர்கள் உதவியுடன் பணியிட மாற்றங்கள் மற்றும் டெண்டர்கள் உள்ளிட்டவைகளில் முறை கேடு செய்து லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அம்மாநில ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சிபிஐ வசம் இதை ஒப்படைத்த நிலையில் , விசாரணையை சிபிஐ கையில் எடுத்துள்ளது. இந்தநிலையில், தான் நேற்று சோதனை நடைபெற்றுள்ளது. பஞ்சாப் முதல்வர் முகாம் அலுவலகம், சிறப்பு அதிகாரி ராஸ்பிர் சிங்கிற்கு சொந்தமான இடங்கள் மற்றும் மேலும் 5 பேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.

பாஜக முடக்கப் பார்க்கிறது - பகவந்த் சிங் மான்

சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. முதல்வரின் முகாம் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

"பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு அஞ்சி அரசு இயந்திரங்களை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. விசாரணை அமைப்புகள் மூலம் எங்களை முடக்கப் பார்க்கிறது' என்று குற்றம் சாட்டி பதிவிட்டுள்ளார். சிபிஐ விசாரணைக்கு பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து, அம்மாநில அரசு மேல் முறையீடு செய்த சில மணி நேரங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+