டிகிரி தகுதி தான்.. வானிலை ஆய்வு மையத்தில் வேலை பார்க்க வாய்ப்பு.. இன்னும் 2 நாள் தான் டைம் இருக்கு!
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தில் சயிண்டிபிக் அசிஸ்டண்ட், அட்மின் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாள் தான் டைம் இருக்கிறது.
வானிலை முன்னறிவிப்புகளை முன்கூட்டியே கணித்து வெளியிடும் பணியை இந்திய வானிலை ஆய்வு மையம் செய்து வருகிறது. மத்திய புவியறிவியல் அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பானது செயல்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இதன் மண்டல அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த மாதம் வானிலை ஆய்வு மையத்தில் 134 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு காணலாம்.

பணியிடங்கள் விவரம்:
சயிண்டிபிக் அசிஸ்டண்ட் - 25, அட்மின் அசிஸ்டண்ட் - 2, ப்ராஜெக்ட் சயிண்டிஸ்ட் டாப்ளர் வெதர் ரேடார் 13 பணியிடங்கள் என மொத்தம் 22 வகையான பணிகளில் 134 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது.
கல்வித் தகுதி:
சயிண்டிபிக் அசிஸ்டண்ட்:
* அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்பியல் பிரிவில் டிகிரி முடித்திருப்பது அவசியம். அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன் என்ஜினியரிங், கம்யூனிகேஷன் என்ஜினியரிங் பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
அட்மின் அசிஸ்டண்ட் பணி
* எதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ப்ராஜெக்ட் சயிண்டிஸ்ட் பணி
துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி தொடர்பான முழு விவரங்களையும் தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்துகொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?
ப்ராஜெக்ட் சயிண்டிஸ்ட் E பணிக்கு ரூ.1,23,100 சம்பளம் வழங்கப்படும். ப்ராஜெக்ட் சயிண்டிஸ்ட் III பணிக்கு ரூ.78,000 சம்பளம் வழங்கப்படும். அட்மின் அசிஸ்டண்ட் பணிக்கு ரூ.29,200 சம்பளம் வழங்கப்படும். இந்த பணியானது முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையிலானது.
தேர்வு முறை:
ஆன்லைன் வழியாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். https://mausam.imd.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 14 ஆம் தேதி தான் கடைசி நாள் ஆகும். இன்னும் இரண்டு நாட்கள் தான் டைம் இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://internal.imd.gov.in/recruits/20251115_rec_248.pdf
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications