தபால் துறையில் மெகா வேலைவாய்ப்பு.. 28 ஆயிரம் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு மார்க் அடிப்படையில் பணி
சென்னை: தபால்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நாடு முழுக்க 28 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்பளத்தை பொறுத்தவரை ரூ. 10 ஆயிரம் முதல் 29,380 வரை வழங்கப்படும்.
மத்திய அஞ்சலக துறை, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் இந்த அஞ்சல் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் என மத்திய அரசு விதிகளின்படி அனைத்து சம்பள படிகளும் கிடைக்கின்றன.

தபால்துறையில் வேலை
அஞ்சல் அல்லது தபால் துறை என அழைக்கப்படும் இந்த துறையில் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. இதில் கிராமின் டக் சேவக் (கிராம அஞ்சல் பணியாளர்கள்), பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.
நாடு முழுவதும் அரசு பணி கனவுடன் காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்திய அஞ்சல் துறை வெளியிடும் இந்த தேர்வு அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த சூழலில்தான் தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த அஞ்சல் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* ஆந்திரப் பிரதேசம் 1,060
* அசாம் 639
* பீகார் 1,347
* சத்தீஸ்கர் 1,155
* டெல்லி 42
* குஜராத் 1,830
* ஹரியானா 270
* இமாச்சல பிரதேசம் 520
* ஜம்மு காஷ்மீர் 267
* ஜார்கண்ட் 908
* கர்நாடகா 1,023
* கேரளா 1,691
* மத்திய பிரதேசம் 2,120
* மகாராஷ்டிரா 3,553
* வடகிழக்கு 1,014
* ஒடிசா 1,191
* பஞ்சாப் 262
* ராஜஸ்தான் 634
* தமிழ்நாடு 2,009
* தெலுங்கானா 609
* உத்தரபிரதேசம் 3,169
* உத்தரகாண்ட் 445
* மேற்கு வங்கம் 2,982
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் கிடையாது. விண்ணப்பதாரர்களின் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 40 வயதுக்குள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு:
ஜிடிஎஸ் (அஞ்சல் பணியாளர்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 24,470 வரை சம்பளமாக வழங்கப்படும். பிபிஎம் பணிக்கு மாதம் ரூ.12 ஆயிரம் முதல் 29,380 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க பிப்ரவரி 14 ஆம் தேதி கடைசி நாள். விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் பிப்ரவரி 16 ஆகும்.
தேர்வு முறை:
10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications