வேலை.. வேலை.. வேலை.. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சூப்பர் வேலைகள்.. இப்படிதான் அப்ளே செய்யணும்
சென்னை: இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் வங்கி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆகும். நாடு முழுவதும் 650 வங்கிகளைக் கொண்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிக்கு 4 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் இந்த வங்கியின் மூலமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் - 23
பணி - Manager, Senior Manager, Chief Manager, Assistant General Manager, Deputy General Manager, General Manager
பணி இடம் - நாடு முழுவதும்
சம்பளம் : மாதம் ரூ.94,000 - ரூ.2,92,000 வரை
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும் (அல்லது) எம்பிஏ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சில குறிப்பிட்ட பணியிடங்களுக்கு சிஏ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், அனைத்து வேலைகளுக்கும் பணி அனுபவமும் தேவை. விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு: - Manager, Senior Manager பணியிடங்களுக்கு 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Chief Manager, Assistant General Manager பணியிடங்களுக்கு 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
Deputy General Manager, General Manager பணியிடங்களுக்கு 55 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசு விதிகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்குத் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை - 2 தேர்வுகள் (எழுத்துத் தேர்வு & Group discussion)
விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு- ரூ. 150/ மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.750/- ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணங்களைச் செலுத்த வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை http://www.ippbonline.com/ என்ற தளத்தில் சென்று ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி 22/10/2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை https://www.ippbonline.com/documents/20133/133019/1633693460640.pdf
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications