அசத்தலான வாய்ப்பு.. 8 ம் வகுப்பு போதும்.. ரூ.63,200 வரை சம்பளம்.. தபால் துறையில் சூப்பர் வேலை..
பெங்களூர்: தபால் துறையில் காலியாக உள்ள skilled Artisans பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சமாக ரூ.62,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புடன் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தான் தற்போது வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தபால் துறையில் தற்போது Skilled Artisans பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி மோட்டார் வாகன மெக்கானிக் பணிக்கு 2 பேர், மேட்டார் வாகன எலக்ட்ரிஷியன், பெயிண்டர், டயர்மேன் (Tyreman) பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம் செய்வோர் தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 8ம் வகுப்பு முடித்து தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மோட்டார் வாகன மெக்கானிக் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கட்டாயமாக எச்எம்வி ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். வயது வரம்பு என்பது 01.07.2023ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் கிடைக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பங்களை உரிய ஆவணங்களின் நகல்களோடு இணைத்து ‛‛The Manager, Mail Motor Service, No.4, Basaveshwara Road, Vasanth Nagar, Bengaluru - 560 001 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் போட்டி டிரெட் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications