10ம் வகுப்பு படித்திருந்தாலே.. இந்திய விமானப்படையில் காத்திருக்கும் வேலைகள்! விண்ணப்பம் உள்ளே
டெல்லி: தென்மேற்கு ஏர் கமாண்டில் உள்ள பல்வேறு குரூப் சி பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப்படை அழைத்துள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விமானப்படை இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, அதை முறையாக பூர்த்தி செய்து ஆஃப்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
பிப்ரவரி 11ம் தேதி விண்ணப்பிக்க வேண்டிய இணைதளம் ஓபன் ஆகும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதி மார்ச் 13, 2021 ஆகும்.

பணிகள் விவரம்
மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்.டி.எஸ்), ஹவுஸ் கீப்பிங் ஸ்டாஃப் (எச்.கே.எஸ்), மெஸ் ஸ்டாஃப், எல்.டி.சி, இந்தி டைப்பிஸ்ட், ஸ்டெனோகிராஃபர் கிரேடு -2, ஸ்டோர் கீப்பர், சலவையாளர், ஆயா / வார்டு ஷகாயிக்கா(பெண்கள் மட்டும்), தச்சர், பெயிண்டர், வல்கனைசர், சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் (சாதாரண தரம்), சமையலர் (சாதாரண தரம்) மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை
இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிப்பது? ஆர்வமுள்ளவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு எந்தவொரு விமானப்படை நிலையத்திற்கும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் indianairforce.nic.in இல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. ஒருவேளை உங்களால் டவுன்லோடு செய்ய முடியாவிட்டால் இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் விண்ணப்பம் உள்ளது. அதை பிரிண்ட் எடுத்து விண்ணப்பியுங்கள்.

எழுத்து தேர்வு
விண்ணப்பத்தை ஆங்கிலம் அல்லது இந்தியில் நிரப்பலாம். விண்ணப்பதாரர்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்ட வேண்டும்.
குறைந்தபட்ச தகுதிகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர்கள் எழுத்துத் தேர்வை எழுத வேண்டும். வினாத்தாளில் நான்கு பிரிவுகள் இருக்கும் - (i) பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு, (ii) எண்ணியல் திறன், (iii) பொது ஆங்கிலம் (iv) பொது விழிப்புணர்வு. வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இருக்கும்.
விவரம்
விண்ணப்பிக்க தொடக்க தேதி: பிப்ரவரி 11, 2021
விண்ணப்பிக்க இறுதி தேதி: மார்ச் 13, 2021
விண்ணப்ப இணையதளம்: indianairforce.nic.in
வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் விண்ணப்ப முறை போன்ற முழு விவரங்களை இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications