இந்திய விமானப்படையில் வேலை பார்க்க விருப்பமா.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்.. விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 3,500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எத்தனை பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வி தகுதி என்ன? என்பவை உள்பட முழுமையான விவரங்கள் குறித்து இங்கே காண்போம்.

மொத்த பணியிடங்கள்: கிட்டத்தட்ட 3,500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க அவகாசம் வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் 06.02.2024 ஆகும்.
கல்வி தகுதி: கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடபிரிவுகளில் 10+2 அல்லது அதற்கு இணையான தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அல்லது டிப்ளமோ என்ஜினியரிங் மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / ஆட்டோ மொபைல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் படித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த தெளிவான விவரங்கள் தேர்வு அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பதாரர்கள் முழு தகவலையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 02 ஜனவரி 2004 முதல் 02 ஜூலை 2007 க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 21 ஆகும்.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, Adaptability Test மற்றும் மெடிக்கல் பரிசோதனை ஆகியவை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும். https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்: அக்னிவீரர்களுக்கான திட்டத்தின் படி ஊதியம் வழங்கப்படும். அதாவது முதல் வருடத்தில் மாதம் ரூ.30 ஆயிரமும் (கையில் In Hand- ரூ.21,000) இரண்டாவது வருடம் 33 ஆயிரம் (கையில் 23,100), மூன்றாம் வருடம் 36,500 ( 23,550), நான்கு வருடத்தில் 40,000 ( ரூ.28,000) என கிடைக்கும். நான்கு ஆண்டுகள் முடிவில் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf இங்கே கிளிக் செய்யவும்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications