கொச்சியில் இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்.. தமிழ்நாடு இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
கன்னியாகுமரி: கொச்சின் எர்ணாகுளம் பி.டி.உஷா சாலை ஷெனாய்ஸ் மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைத்து வருகிற 28-1-25 முதல் 6-2-25 வரை மருத்துவ உதவியாளர் (பொது போட்டியாளர்கள்) மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு (மருந்தாளுனர் போட்டியாளர்கள்) நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைத்து மாவட்ட இளைஞர்களும் பங்கேற்லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பலருக்கும் விமானப்படையில் வேலைக்கு சேர வேண்டும் என்று ஆசை இருக்கும். மத்திய அரசு பணி, தேசத்திற்கு வேலை செய்யும் பணி, நல்ல சம்பளம், நல்ல ஓய்வூதியம், வாழ்க்கை தரமே மாறும் என்பதால் பலரும் விமானப்படையில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள்.. விமானப்படையில் வேலைக்கு அவ்வப்போது ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் தற்போது கொச்சியில் ஆட்கள் தேர்வு

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "இந்திய விமானப்படைக்கான நேரடி ஆள்சேர்ப்பு முகாம் கொச்சின் எர்ணாகுளம் பி.டி.உஷா சாலை ஷெனாய்ஸ் மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைத்து வருகிற 28-1-25 முதல் 6-2-25 வரை மருத்துவ உதவியாளர் (பொது போட்டியாளர்கள்) மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு (மருந்தாளுனர் போட்டியாளர்கள்) நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைத்து மாவட்ட இளைஞர்களும் மேற்படி நேரடி ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
அவ்வாறு தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மருத்துவ உதவியாளர்களுக்கு (பொது போட்டியாளர்கள்) 29-1-25 அன்று நேரடி தேர்வு நடக்கிறது. இவர்களுக்கு கல்வி தகுதி 10, பிளஸ்-2 மற்றும் டிப்ளமோ, பி.எஸ்.சி., பார்மஸி ஆகும். மேலும் ஜூலை 2004 முதல் ஜூலை 2008-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
அதுபோல மருத்துவ உதவியாளர்களுக்கு (மருந்தாளுனர் போட்டியாளர்கள்) 4-2-25 அன்று நடக்கிறது. இவர்களுக்கு கல்வி தகுதி டிப்ளமோ, பி.எஸ்சி., பார்மஸி ஆகும். ஜூலை 2001 முதல் ஜூலை 2006-க்குள் பிறந்தவர்களாக இருக்கு வேண்டும். மேலும் அதிகாலை 5 மணிக்குள் ஆள்சேர்ப்பு முகாமுக்குள் ஆஜராக வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications