சென்னை பள்ளியில் வேலை.. 28 ஆயிரம் வரை சம்பளம்.. 10, 12ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சென்னை ஆவடியில் உள்ள இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பள்ளியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை 28,500 வரை வழங்கப்படும்.
சென்னை ஆவடியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பள்ளி உள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் வரும் இந்த பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இந்தப் பள்ளியில் காலியாக உள்ள 18 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்;
* ஆசிரியர் (PRT): 03
* ஆசிரியர்: (Special Educator): 01
* நர்சரி ஆசிரியர் பயிற்சி: 04
* உதவியாளர்: 04
* வாட்ச்மேன்: 06
கல்வித் தகுதி:
*ஆசிரியர் பணிக்கு தேவையான கல்வித் தகுதி பெற்று இருக்க வேண்டும். D.Ed, B.El.Ed. உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* வாட்ச்மேன் பணிக்கு10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* உதவியளர் பணிக்கு 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வயது வரம்பு:
* ஆசிரியர் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* உதவியாளர் பணிக்கு 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். * வாட்ச்மேன் பணிக்கு 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
* சம்பளத்தை பொறுத்தவரை ஆசிரியர் பணிக்கு ரூ.28,500 வழங்கப்படும்.
* உதவியாளர் பணிக்கு ரூ.13,000 வழங்கப்படும்.
* வாட்ச்மேன் பணிக்கு ரூ.13,000 வழங்கப்படும்.
தேர்வு முறை:
* தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுத்துதேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வர்கள் விண்ணப்ப படிவத்தை https:// www. afschoolavadi.com. என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
* விண்ணப்ப படிவத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு வரும் 20 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் தேவையான கல்விசான்று நகல்களை சுய சான்றளித்து இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
"The Principal,
Air Force School Avadi,
Chennai 600055"
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://afschoolavadi.com/Carrier.html












Click it and Unblock the Notifications