மாதம் ரூ.36,000 முதல் ரூ.89,890 வரை சம்பளம்.. வங்கியில் வேலை வேண்டுமா? இதோ சூப்பர் வாய்ப்பு
இந்தியன் வங்கியில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: இந்தியன் வங்கியில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் அல்லது ஏதேனும் ஒரு படிப்பில் டிகிரி முடித்தவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.36 ஆயிரம் முதல் ரூ.89,890 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றுதான் இந்தியன் வங்கி. பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன.
இந்நிலையில் தான் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இந்தியன் வங்கியில் Specialist Officer எனும் பதவியின் கீழ் மொத்தம் 203 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தலைமை மேலாளர், சீனியர் மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் என்ற பொறுப்புகளில் மொத்தம் 41 பிரிவுகளில் பணியமர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு என்ன?
ஒவ்வொரு பதவிகளுக்கு வயது வரம்பு தனித்தனியே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் வயது தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வி தகுதி - மாத சம்பளம் என்ன?
விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மத்திய அல்லது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சிஏ, ஐசிடபிள்யூஏ, பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு அல்லது பிடெக், எம்டெக், பிஇ, எம்இ உள்ளிட்ட ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.36 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக மாதம் ரூ.89,890 வரை வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 16ம் தேதியில் இருந்து பிப்ரவரி 28 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். https://www.indianbank.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.175 செலுத்த வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு அல்லது நேர்க்காணல் முறையில் விண்ணப்பம் செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications