இந்திய கடலோர காவல் படையில் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: இந்திய கடலோர காவல் படையில் உள்ள 12 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் சி பிரிவு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்திய கடலோர காவல்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலேயே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. என்ஜின் டிரைவர், லஸ்கர் என மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
என்ஜின் டிரைவர் - 01
லஸ்கர் -1
வரைவாளர் -1
ஃபயர் மேன்/மெக் ஃபையர் மேன் - 01
சிவிலியன் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர் -1
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் - 03
மோட்டார் டிராஸ்போர்ட் ஃபிட்டர் - 01
எலக்ட்ரிக்கல் ஃபிட்டர்: 01
ஐசிஇ (ICE) -ஃபிட்டர் (ஸ்கில்டு) - 01
அன்ஸ்கில்டு லேபர் - 01
என மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: என்ஜின் டிரைவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தகுதியுடன் என்ஜின் டிரைவருக்கன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 32 வயதுக்குபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். என்ஜின் டிரைவர், லஸ்கர், சிவிலியன் மோட்டார் மெக்கானிக் , ஐசிஇ ஃபிட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். மல்டி டாஸ்கிங் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும். அரசு விதிகளின் படி அனைத்து பணியிடங்களுக்கும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தேர்வு செய்யப்படும் விண்ணப்ப தாரர்களுக்கு எழுத்து தேர்வு, தகுதித்தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் பணியில் சேர்க்கப்படுவர். ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.11.2024 ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பி 25.11.2024 ஆம் தேதிக்குள் சென்றடையும் படி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:
The Commander
Coast Guard Region (East)
Newar Napier Bridge Fort,
St George (po)
Chennai - 600009
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://indiancoastguard.gov.in/ViewAllCircular_whtnew_Reports.aspx?ModuleID=30 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications