இந்திய கடலோர காவல் படையில் வேலை.. 22 ஆயிரம் சம்பளம்.. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 300 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளம் ரூபாய் 21,700 வழங்கப்படும். எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Navik (பொது பணி), Navik Domestic Branch- பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பர்க்கலாம்.

job Jobs employment

பணியிடங்கள் விவரம்:
* நேவிக் (GD): காலியிடங்களின் எண்ணிக்கை: 260 : கல்வி தகுதியை பொறுத்தவரை 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* Navik(DB): மொத்தம் 40 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளன. கல்வி தகுதியை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 22 வயதுக்கு மிகாதவர்களாக இருத்தல் அவசியம். செப்டம்பர் 1 2003 க்கு முன்போ ஆகஸ்ட் 2007 க்கு பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது. அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.

சம்பளம்:
* நேவிக் (GD) - ரூ. 21,700/- (Pay Level-3)
* நேவிக் (DB) - Rs. 21,700/- (Pay Level-3)

தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை கணிணி வழியிலான ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, போலீஸ் சரிபார்ப்பு உள்ளிட்டவை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.02.2025 ஆகும்.

தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு அறிவிப்பினை படிக்க: இந்த லிங்கை கிளிக் https://joinindiancoastguard.cdac.in/cgept/ செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+