செமவாய்ப்பு! 10ம் வகுப்பு போதும்.. கைநிறைய சம்பளம்! கடற்படையின் சென்னை தலைமையகத்தில் அசத்தலான வேலை!
சென்னை: சென்னையில் உள்ள இந்திய கடற்படையின் மண்டல தலைமையகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு, ஐடிஐ படித்து முடித்தவர்கள் செப்டம்பர் மாதம் 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்திய கடற்படையின் சென்னையில் உள்ள மண்டல தலைமையகத்தில் 6 பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
டிரைவர்: இந்திய கடற்படையின் சென்னை மண்டல தலைமையகத்தில் தற்போது சிவிலியன் மோட்டார் போக்குவரத்து டிரைவர் பணிக்கு மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு முடித்து ஹெவி லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு உண்டு.
ஷீட் மெட்டல் வொர்க்கர்: அடுத்ததாக ஷீட் மெட்டல் வொர்க்கர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப்: மேலும் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பிரிவில் மோட்டார் டிரான்ஸ்போர்ட் கிளீனர், ஸ்வீப்பர், சவுக்கிதார் (Chowkidar) தலா ஒருவரும், அன்ஸ்கில்ட் லேபர் (Unskilled Labour) பணிக்கு 2 பேர் என மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாதசம்பளம்: இதில் சிவிலியன் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர் மற்றும் ஷீட் மெட்டல் வொர்க்கர் பணிக்கு Pay Level- 02 (மாதம் ரூ.18,000 டூ ரூ.56,900) என்ற அடிப்படையிலும் பிற பணிகளுக்கு Pay Level 1 (மாதம் ரூ.19,900 டூ ரூ.63,200) என்ற அடிப்படையிலும் சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் indiacoastguard.gov.in இணையதளம் மூலம் செப்டம்பர் 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ‛‛The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai (600 009)'' என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications