இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான்
சென்னை: இந்திய கடற்படையில் 2027 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர் (SSR), அக்னிவீர் எம்.ஆர் (MR) மற்றும் எஸ்.எஸ்.எஸ் (மருத்துவம்) மாலுமி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
இந்திய கடற்படையில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. நாட்டிற்கு சேவை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

அக்னி பாத் திட்டம்
இந்திய கடற்படையில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்த அக்னிபாத் திட்டம் என்பது 4 ஆண்டுகளுக்கு பிறகு செயல் திறன் அடிப்படையில் வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு அறிவிப்பானது வெளியாகியிருக்கிறது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
அக்னிவீர் எம்.ஆர், அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர், அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர் (மருத்துவம்) ஆகிய பிரிவுகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதிகள்:
* அக்னிவீர் எம்.ஆர் பதவிக்கு 10ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
* எஸ்.எஸ்.ஆர் பதவிக்கு கணிதம், இயற்பியலுடன் 12ஆம் வகுப்பிலோ அல்லது மூன்று வருட டிப்ளமோவிலோ 50% மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.
* அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர் (மருத்துவம்) பதவிக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அவசியம்.
வயது வரம்பு
வயது வரம்பினை பொறுத்தவரை பதவிகளுக்கு தகுந்தபடி மாறுபடும்.
* அக்னிவீர் எம்.ஆர் பணிக்கு 01 டிசம்பர் 2004 முதல் 31 மே 2009 வரை (இரண்டு தேதிகளும் உட்பட) பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
* அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர் பணிக்கு 01 டிசம்பர் 2004 முதல் 31 மே 2009 வரை (இரண்டு தேதிகளும் உட்பட) பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
* அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர் (மருத்துவம்) பணிக்கு 01 மே 2005 முதல் 31 அக்டோபர் 2009 வரை (இரண்டு தேதிகளும் உட்பட) பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
சம்பளம் எவ்வளவு
* அக்னிவீர் எம்.ஆர் - மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும்.
* அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர் - மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும்.
* அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர் (மருத்துவம்) - மாதம் ரூ.21,000 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வு முறை எழுத்து மற்றும் உடல் தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். உடல் தகுதி தேர்வை பொறுத்தவரை, ரன்னிங், ஸ்குவாட்ஸ், புஷ்-அப்கள், சிட்-அப்கள் கொண்டதாக இருக்கும். ஆண், பெண் இருபாலரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் ரூ.550 ஆகும்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6, 2026 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மே 2026 இல் நடத்தப்பட்டு, முடிவுகள் ஜூன் 2026 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications