மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை.. டிகிரி தகுதி தான்! இன்றே கடைசி நாள்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் 246 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து விடுங்கள். 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்தியன் ஆயில் நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் செயல்படுகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 246 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள்: ஜூனியர் ஆபரேட்டர் பதவிக்கு 246 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வித் தகுதியானது மாறுபடுகிறது. ஐடிஐ, 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். ஜூனியர் ஆபரேட்டர் கிரேடு 1 பணிக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஒரு ஆண்டு பணி அனுபவம் தேவை.
ஜூனியர் அட்டண்டண்ட் கிரேடு 1 பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். பணி அனுபவம் தேவை இல்லை.
டிகிரி முடித்தவர்கள் ஜூனியர் பிசினஸ் அசிஸ்டண்ட் கிரேடு III- பணிக்கு விண்ணைப்பிக்கலாம். குறைந்தது 45 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எம்எஸ் வேர்டு, எக்செல் & பவர் பாயிண்ட் போன்ற கணினியின் அடிப்படை அறிவு அவசியம் ஆகும். இதேபோன்று ஒரு நிமிடத்திற்கு 20 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இது போக ஓராண்டு பணி அனுபவம் அவசியம் ஆகும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 26 வயது நிரம்பியவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
சம்பளம் விவரம்:
* ஜூனியர் ஆபரேட்டர் Grade I: ரூ. 23,000 - 78,000/-
* ஜூனியர் அட்டண்டண்ட் Grade I: ரூ. 23,000 - 78,000/-
* ஜூனியர் பிசினஸ் அசிஸ்டண்ட் Grade III: ரூ. 25,000 - 1,05,000/-
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை, கணிணி வழி தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழகத்தில் தேர்வு மையமானது சென்னையில் அமைக்கப்படும். விண்ணப்பக்க கட்டணத்தை பொறுத்தவரை ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு எந்த தேர்வுக் கட்டணமும் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே 23 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இரவு 11.55 மணிக்குள் விண்ணப்பித்து விடவும்.
கல்வித் தகுதி உள்பட முழுமையான மற்றும் தெளிவான விவரங்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/613feac7e44444bb91a7d6b610014b16.pdf செய்யவும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் முன்பாக அவசியம் இதை படித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications