இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. 66 பணியிடங்கள்.. அதுவும் சென்னையிலேயே.. கல்வி தகுதி என்ன? விவரம்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் மிகப்பெரும் வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 66 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவற்றை இங்கே காணலாம்.

பணியிடங்கள் விவரம்: மேனேஜர் (சட்டம்)- 08 பணியிடங்கள், சீனியர் மேனேஜர் (சட்டம்) 02 பணியிடங்கள், மேனேஜர் (ஐ.எஸ் ஆடிட்) 03 பணியிடங்கள், சீனியர் மேனேஜர் (ஐ.எஸ் ஆடிட்) 02 பணியிடங்கள், மேனேஜர் (பாதுகாப்பு) 03, தலைமை மேனேஜர் (ரிஸ்க்) 02, மேனேஜர் (சிவில்) 02, மேனேஜர் ஆர்கிடெட்க் -02, மேனேஜர் டிஜிட்டல் பேங்கிங் (ஐபி, எம்.பி, யுபிஐ, ஐஓபிபே) 01 என மொத்தம் 22 வகையான பணியிடங்களில் 66 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கல்வித்தகுதி: துறைசார்ந்த கல்வி தகுதியுடன் அனுபவம் கோரப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம். https://www.iob.in/upload/CEDocuments/Recruitment_of_Specialist_Officers_2023-24_051123.pdf தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
வயது வரம்பு: 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சீனியர் மேனேஜர், சீஃப் மேனேஜர் ஆகிய பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. அதாவது ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும். அதிகபட்சமாக ரூ.89,890 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 19.11.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.175 செலுத்த வேண்டும். ஒபிசி&EWS மற்றும் பொது பிரிவினர் ரூ. 850 செலுத்த வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்கhttps://www.iobnet.org:4441/recruitApp/RecApplicationAction.do?Method=MainPage
என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications