இந்தியன் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி.. 9,970 பணியிடங்கள்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: இந்தியவின் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. 9,970 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, தேர்வர்கள் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய விவரங்கள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.
இந்தியவின் ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் தனி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான ஊழியர்களின் கனவாக உள்ளது.

இதனால், ரயில்வே வெளியிடும் தேர்வு அறிவிப்பை ஆவலுடன் எதிபார்த்து வந்த நிலையில்தான், தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி லோகோ பைலட் பணிக்கு தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயில் மட்டும் 510 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு தற்போது துவங்கியுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மத்திய ரயில்வே - 376
கிழக்கு ரயில்வே - 868
தெற்கு ரயில்வே - 510
மேற்கு ரயில்வே - 885
தென் கிழக்கு ரயில்வே - 921
வடக்கு ரயில்வே - 521
வடகிழக்கு பார்டர் - 125
கிழக்கு மத்திய ரயில்வே - 700
வட மத்திய ரயில்வே - 508
மேற்கு மத்திய ரயில்வே - 759
தென் கிழக்கு மத்திய ரயில்வே - 568
தென் மத்திய ரயில்வே - 989 ள்
வட கிழக்கு ரயில்வே - 100
வடமேற்கு ரயில்வே - 679
மெட்ரோ ரயில்வே கொல்கத்தா - 225 என மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 9,970- ஆக உள்ளது.
விண்ணப்ப பதிவு தொடங்கியது
தெற்கு ரயில்வேயில் 510 பணியிடங்கள் உள்பட மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 9,970 பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்கியுள்ளது. ரயில்வேயின் ஆட்சேர்ப்பு வாரியமான் ஆர்ஆர்பி இணையதளத்தில் தேர்வர்கள், கேட்கப்பட்டுள்ள விவரங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதியை பொறுத்தவரை தேர்வர்கள் 10 ஆம் கல்வித் தகுதியுடன் துறைசார்ந்த பிரிவில் ஐடிஐ மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ, என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் / ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஜூலை 1, 2025 தேதிப்படி இந்த வயது வரம்பை எட்டியிருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் மாதம் ரூ.500 கட்டணம் செலுத்தினால் போதும். கணினி வழியிலான சிபிடி தேர்வின் முதல் ஸ்டேஜில் பங்கு பெற்ற பின்னர் ரூ.400 கட்டணம் திருப்பி அளிக்கப்படும். எஸ்.சி / எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு முறை:
சிபிடி எனப்படும் இரண்டு கட்ட கணிணி வழியிலான தேர்வு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்க்ள். சிபிடி தேர்வில் கொள்குறி வகையிலான கேள்விகள் 75 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டும்.
ஸ்டேஜ் 2 சிபிடி தேர்வில் பார்ட் ஏ, பார்ட் பி என இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். பார்ட் ஏ- வில் 100 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். பார்ட் பி- யில் லோகோ பைலட் துறைசார்ந்த 75 கேள்விகள் இடம் பெற்று இருக்கும். 60 நிமிடங்களுக்குள் இந்த தேர்வை எழுத வேண்டும்.விண்ணப்பிக்க மே 11 ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrbchennai.gov.in/
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications