Indian Railway Job: ரயில்வேயில் 119 பணியிடங்கள்! டிகிரி முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.35,400 சம்பளம்!
சென்னை: இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 119 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 119 செலக்ஷன் கண்ட்ரோலர் (Section Controller) பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு, எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) நிரப்பி வருகிறது. நிரந்தர அரசுப் பணி என்பதால் இளைஞர்கள் பலரும் ஆர் ஆர் பி வெளியிடும் அறிவிப்புக்காக காத்திருப்பார்கள். தற்போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஆர்.ஆர்.பி காலியாக உள்ள 119 செக்ஷன் கன்ட்ரோலர் (Section Controller) பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 15.07.2026 முதல் தொடங்க உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அன்று முதல் 14.08.2026 இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த 119 பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
கல்வித் தகுதி என்ன?
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் (Graduate Degree) பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக குறிப்பிட்ட பாடப்பிரிவு தேவையில்லை.
வயது வரம்பு
வயது வரம்பானது 01.07.2026 தேதியின்படி கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* OBC (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு
* SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு
* மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிப்படி கூடுதல் வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level-6 ஊதிய விகிதத்தில் மாதம் ரூ.35,400 தொடக்க ஊதியமாக வழங்கப்படும். இதனுடன் அரசு விதிப்படி பல்வேறு படிகளும் கிடைக்கும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கட்டங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
* கணினி வழி தேர்வு (CBT)
* மருத்துவ பரிசோதனை
* ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்
* SC / ST / பெண்கள் / PwBD / Transgender - ரூ.250 (தேர்வு எழுதிய பிறகு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும்)
* மற்ற விண்ணப்பதாரர்கள் - ரூ.500 (தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி வழங்கப்படும்)
எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்
* விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.07.2026
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2026 இரவு 11.59 மணி
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in/ மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 15.07.2026 அன்று தொடங்கி, 14.08.2026 அன்று இரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது.
ரயில்வே துறையில் நிரந்தர அரசுப் பணி பெற விரும்பும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டு (Exam Hall Ticket) மற்றும் நேர்காணல் அழைப்புக் கடிதம் ஆகியவை தேர்வுத் தேதிக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://drive.google.com/file/d/1TcFZkvc1crFIeE3e0RmFTUYRyAga_JWp/view














Click it and Unblock the Notifications