ரயில் டிரைவர் ஆகணுமா? 9,970 பணியிடங்கள்.. 2 நாள் தான் டைம் இருக்கு.. மறந்துடாதீங்க
சென்னை: இந்தியன் ரயில்வேயில் 9,970 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் தான் டைம் இருக்கிறது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சான்ஸை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை சம்பளமாக அளிக்கப்படும்.
இந்திய ரயில்வே என்பது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது. பல லட்சக்கணக்கான ஊழியர்கள் ரயில்வே துறையில் பணியாற்றுகிறார்கள். மத்திய அரசில் தனி அமைச்சகத்தின் கீழ் ரயில்வே இயங்கி வருகிறது. ரயில்வேயில் பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது உரிய அறிவிப்பினை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிடுவது வழக்கம்.

பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிகிரி என கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி இதற்கான அறிவிப்பை வெளியிடுகிறது. இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆரம்பமே பல ஆயிரங்களில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதுபோக குடியிருப்பு வசதி, ரயிலில் பயண சலுகை என பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.
அரசு துறை சார்ந்த பணி என்பதால், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தால் போதும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என கருதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். தேர்வு மையங்களுக்கு சென்று படித்தும் வீட்டில் இருந்தும் தயாராகி வரும் தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், கடந்த மாதம் 9,970 ரயில்வே உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை ரயில்வே வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்னும் இரண்டு நாளில் முடிகிறது. எனவே நினைவூட்டும் வகையில் மீண்டும் ஒரு முறை தேர்வு குறித்த முழு விவரங்களை இங்கே விவரமாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: உதவி லோகோ பைலட் பணி: 9,970
மண்டல வாரியாக பார்த்தோம் என்றால் தெற்கு ரயில்வேயில் மட்டும் 510 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதர மண்டலங்களின் விவரம்:
மத்திய ரயில்வே - 376,
கிழக்கு ரயில்வே - 868,
மேற்கு ரயில்வே - 885,
தென் கிழக்கு ரயில்வே - 921,
வடக்கு ரயில்வே - 521,
வடகிழக்கு பார்டர் - 125,
கிழக்கு மத்திய ரயில்வே - 700
வட மத்திய ரயில்வே - 508
மேற்கு மத்திய ரயில்வே - 759,
தென் கிழக்கு மத்திய ரயில்வே - 568,
தென் மத்திய ரயில்வே - 989,
வட கிழக்கு ரயில்வே - 100,
வடமேற்கு ரயில்வே - 679,
மெட்ரோ ரயில்வே கொல்கத்தா - 225, என மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 9,970- ஆக உள்ளது.
கல்வி தகுதி:
10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் ஐடிஐ, மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ, என்ஜினியரிங் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் / ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
லோகோ பைலட் பணியிடங்களுக்கு 18 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். 01.07.2025 வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் என்றால் 35 வயது வரையும், ஒபிசி பிரிவு என்றால் 33 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினருக்கும் அரசு விதிமுறைகளின் படி சலுகைகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?
7-வது ஊதிய கமிஷன் விதிப்படி பே லெவல் 2 படி ஆரம்ப சம்பளமே ரூ.19,900 வழங்கப்படும். அதாவது 19,900- 63,200 வரை சம்பளமாக அளிக்கப்படும்.
தேர்வு முறையை பொறுத்தவரை இரண்டு கட்டங்களாக கணினி வழி தேர்வு நடைபெறும். சிபிடி 1, சிபிடி 2 என இரண்டு கட்ட தேர்வுகளும், கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்டும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்., எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணம். சிபிடி தேர்வு எழுதிய பிறகு ரூ.100 கட்டணம் மட்டும் பிடித்தம் செய்யப்பட்டு 400 ரூபாய் விண்ணப்பதாரர்கள் செலுத்திய வழியிலேயே திருப்பி தரப்படும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும். விண்ணப்பிக்க வரும் 19.05.2025 கடைசி நாளாகும்.
இன்னும் சரியாக இரண்டு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது. இதனால் பொன்னான வாய்ப்பை மிஸ் பண்ணிவிடாதீர்கள். தேவையான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து தகுதிகளும் இருந்தால் உடனே விண்ணப்பம் செய்யுங்கள். அதற்கு முன்பாக இந்ததேர்வு அறிவிப்பை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பை படிக்க: https://www.rrbchennai.gov.in/downloads/Final_CEN_01-2025_ALP_English.pdf












Click it and Unblock the Notifications