இந்தியன் ரயில்வேயில் வேலை.. எக்ஸாம் கிடையாது.. 1,599 பணியிடங்கள்.. 10ம் வகுப்பு தகுதி தான்
சென்னை: இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஃபிட்டர், மெக்கானிக், பெயிண்டர் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 1,599 அப்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கிழக்கு மண்டல ரயில்வே அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரங்கள்:
ஃபிட்டர் - 80
ஷீட் மெட்டல் - 20
வெல்டர் - 38
மெஷினிஸ்ட் - 12
மெக்கானிக் - 10
தச்சர் - 30
பெயிண்டர் - 10 என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 1,599 பயிற்சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி:
துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருப்பது அவசியம். அப்ரெண்டீஸ் சட்டம் 1961 படி என்.சி.விடி/ அகடமிக் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணைப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினர் என்றால் 29 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 27 வயது வரையும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 34 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பெண்கள், எஸ்சி / எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. பிற விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக மட்டுமே சமர்பிக்க வேண்டும்.
www.rrcbbs.org.in என்ற ஆன்லைன் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்னப்பிக்க வரும் 15.09.2026 கடைசி நாள் ஆகும். தேர்வு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள https://www.rrcbbs.org.in/Act-apprenticeship.pdf


Click it and Unblock the Notifications
