ரயில்வே என்டிபிசி வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது! லட்டு மாதிரி சான்ஸ்.. விட்றாதீங்க
சென்னை: இந்திய ரயில்வேயில் ஆர்.ஆர்.பி என்டிபிசி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர் உள்பட பல்வேறு பதவிகளில் மொத்தம் 5,810 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, தேர்வு முறை என்ன என்பனவற்றை இங்கு பார்க்கலாம்.
இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் கனவாக உள்ளது. நல்ல சம்பள சலுகைகள் கிடைப்பதால் ரயில்வே வேலைக்கு சென்றால் போதும்.. வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என கருதி பல லட்சக்கணக்கான தேர்வர்கள் ரயில்வே தேர்வுக்கு படித்து வருகிறார்கள்.

ரயில்வே என்டிபிசி வேலை
ரயில்வேயை பொறுத்தவரை டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படுகின்றன. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான (RRB) வாயிலாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்வு அறிவிப்புகளில் ஒன்றான RRB NTPC Graduate காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* ஸ்டேஷன் மாஸ்டர் - 615 பணியிடங்கள்
* சரக்கு ரயில் மேலாளர் - 3,416 பணியிடங்கள்
* ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் - 921 பணியிடங்கள்
* சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் - 638 பணியிடங்கள்
* போக்குவரத்து உதவியாளர் - 59 பணியிடங்கள் என மொத்தம்: 5,810 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளை பின்பற்றி வயது வரம்புகளில் தளர்வு அளிக்கப்படும்.
முக்கியமான தேதிகள்:
மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (அக்.21) முதல் தொடங்கியது. விண்ணப்பிக்க வரும் நவம்பர் 20 கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: நவம்பர் 22 ஆகும். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், நவம்பர் 23 முதல் டிசம்பர் 2ஆம் தேதிக்குள் செய்யலாம்.
தேர்வு எழுத உதவியாளர்கள் (scribe) தேவைப்படும் தேர்வர்கள், தங்கள் விண்ணப்பத்தில் அதற்கான விவரங்களை டிசம்பர் 3 முதல் 7ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
* டிக்கெட் சூப்பர்வைசர்: ₹35,400
* ஸ்டேஷன் மாஸ்டர்: ₹35,400
* சரக்கு ரயில் மேலாளர்: ₹29,200
* ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட்: ₹29,200
* சீனியர் கிளார்க் & டைப்பிஸ்ட்: ₹29,200
* டிராஃபிக் அசிஸ்டென்ட்: ₹25,200
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் RRB இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்களின் சுய விவரங்கள், விண்ணப்பிக்கும் பணி, புகைப்படம் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். தேர்வர்கள் இரண்டு கட்ட கணினி வழி தேர்வுக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும்.
-
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
IT Jobs: ரூ.8 லட்சம் வரை சம்பளம்.. வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அசத்தலான சான்ஸ் -
மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வங்கியில் வேலை.. பிஇ தகுதி தான்.. இன்னும் 2 நாள் தான் இருக்கு! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க












Click it and Unblock the Notifications