டிகிரி போதும் + அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் இன்போசிஸ் நிறுவனம்! டேட்டா என்ட்ரி வேலை
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இன்போசிஸ் நிறுவனம் உலகின் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த இன்போசிஸ் நிறுவனத்தின் பிபிஎம் (Infosys BPM Limited) சார்பில் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி இன்போசிஸ் ஐபிஎம் நிறுவனத்தில் புராசஸ் எக்ஸிக்யூட்டிவ் டேட்டா என்ட்ரி - டெலிகாம் (Process Executive - Data Entry - telecom) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
இதுதவிர அனலிசிஸ் திறமை, நல்ல பிரசென்டேஷன் திறமை, நல்ல கம்யூனிகேஷன் திறமை, இமெயில் அனுப்பும் திறமை உள்ளிட்டவை கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்வோர் டெலிகாம் டொமைன் பற்றிய அறிவை பெற்றிருப்பது பிளஸ் பாயிண்டாகும்.
மேலும் தொடர்புடைய துறையில் 0 முதல் 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். நைட் ஷிப்ட் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த பணிக்கான மாதசம்பளம் என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் தற்போதைய பணிக்கான அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் விண்ணப்பம் முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக இன்போசிஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்து கொள்வது நல்லது.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications