டிகிரி மட்டும் போதும்.. சென்னையில் இன்போசிஸ் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. நல்ல சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் இன்போசிஸில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இன்போசிஸ் நிறுவனம் உலகின் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த இன்போசிஸ் நிறுவனத்தின் பிபிஎம் (Infosys BPM Limited) நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள இன்போசிஸ் பிபிஎம் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி சென்னை இன்போசிஸ் பிபிஎம் லிமிடெட்டில் ‛ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ்' (Process Executive)/சீனியர் ப்ராசஸ் எக்ஸிக்யூடட்டிவ் (Senior Process Executive) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பிஇ, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு நல்ல கம்யூனிகேஷன் திறமை, அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், எம்எஸ் ஆபிசில் பணியாற்றும் திறமை, எக்ஸ்எல்லில் திறமையாக வேலை செய்வது உள்ளிட்ட திறமைகளை கொண்டிருக்க வேண்டும். மேலும் டிஜிட்டல் டொமைன் SAP or Navigo Application அனுபவம் இருந்தால் பிளஸ் பாயிண்டாக இருக்கும். இதுதவிர 24 X 7 என்ற வகையில் சுழற்சி முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி நைட் ஷிப்ட், தேவையென்றால் வார இறுதி நாட்களிலும் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு 0 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிகிரி முடித்து மேற்கூறிய திறமைகளை கொண்டிருப்பதன் மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த பணிக்கான மாதசம்பளம் என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் தற்போதைய பணிக்கான அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் விண்ணப்பம் முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக இன்போசிஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்து கொள்வது நல்லது.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications