இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அதுவும் NON - IT பணி.. வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அதிகளவிலான ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் தான் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்த நிறுவனம் பெங்களூரை மையமாக வைத்து தான் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் பெங்களூர் இன்ஃபோசிஸில் அவ்வப்போது வெவ்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது Non IT பிரிவில் பணியாற்றுவதற்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ப்ராசஸ் டிரெய்னி (Process Trainee) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது ஒரு Customer Support Role வகை பணியாகும். இந்த பணிக்கு 0 - 1 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்படுவார்கள். அதேவேளையில் தேவையென்றால் பிற இடங்களுக்கும் மாற்றம் செய்யப்படுவார்கள்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்கு உரையாட தெரிந்திருக்க வேண்டும். இந்தி மொழியும் தெரிந்திருக்க வேண்டும். பிழையின்றி இ-மெயில் அனுப்ப தெரிந்திருக்க வேண்டும். மேலும் தேவையென்றால் வார விடுமுறையில் கூட பணியாற்ற முன்வரும் குணம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் திறமையை பொறுத்து நல்ல சம்பளம் வழங்கப்படலாம். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications