Infosys வேலைவாய்ப்பு.. சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.. விண்ணப்பம் செய்வது எப்படி?
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ். இந்த நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு நம் நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் இன்போசிஸ் நிறுவனத்தில் (Infosys) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி இன்போசிஸ் நிறுவனத்தில் Power Programmer - Specialist Programmer Java Full Stack (Q2-FY-25) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னிக்கல் மற்றும் ப்ரோபஷனல் ஸ்கில்ஸ் என்று பார்த்தால் ஜாவா, மைக்ரோ சர்வீசஸ் ஸ்பிரிங்புட்டை (SpringBoot) கொண்டிருக்க வேண்டும். Preferred Skills என்று பார்த்தால் டெக்னாலஜி - > ஃபுல் ஸ்டாக் - >ஜாவா ஃபுல் ஸ்டாக் இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 24 X 7 என்ற வகையில் சுழற்சி முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த பணிக்கு மேற்கூறிய துறையில் குறைந்தபட்சமாக 1 ஆண்டு பணி அனுபவம் முதல் அதிகபட்சமாக 8 ஆண்டு வரையிலான பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் என்பது தெரிவிக்கப்படவில்லை. மாதசம்பளம் குறித்த விபரம் பணிக்கான இன்டர்வியூவின் போது தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹10 லட்சம் கார் முன்பணம், பண்டிகை முன்பணம்? புது விதி? -
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications