அனுபவம் வேண்டாம்.. எம்பிஏ படித்தவர்களுக்கு ஜாக்பாட்.. Infosys தரும் சூப்பர் வேலை.. ரெடியா?
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸில் இருந்து எம்பிஏ படித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு எம்பிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ். இந்த நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு நம் நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் இன்போசிஸ் நிறுவனத்தில் (Infosys) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி அசோசியேட் கன்சல்டண்ட் (Associate Consultant) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் எம்பிஏ படிப்பை 2024ம் ஆண்டில் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் 0 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பொதுவாக இந்த பணிக்கு அனுபவம் மிக்கவர்களை தான் இன்போசிஸ் தேர்வு செய்யும். ஆனால் இந்த முறை பணி அனுபவம் இல்லாதவர்களும் கூட விண்ணப்பம் செய்து பணியை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் என்பது தெரிவிக்கப்படவில்லை. மாத சம்பளம் குறித்த விபரம் பணிக்கான இன்டர்வியூவின் போது தெரிவிக்கப்படும். மேலும் இந்த பணி குறித்த முழு அறிவிப்பு விண்ணப்பம் செய்வோருக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் அனைத்து இன்போசிஸ் நிறுவனத்திலும் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications