ஆண்டுக்கு ரூ.6.25 லட்சம் டூ ரூ.9.50 லட்சம் வரை சம்பளம்.. Infosys தரும் அசத்தலான வேலை.. ரெடியா?
சென்னை: இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது 2 வகையான பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஒரு பணிக்கு ஆண்டுக்கு ரூ.6.25 லட்சம் சம்பளமும், இன்னொரு பணிக்கு ஆண்டுக்கு ரூ.9.5 லட்சம் சம்பளமும் வழங்கப்பட உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் (Specialist Programmer)மற்றும் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (Specialist Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் பணிக்கு ஆண்டுக்கு ரூ.9.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். அதேபோல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் பணிக்கு ஆண்டுக்கு ரூ.6.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 2024, 2025ம் ஆண்டில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதன்டி, பிஇ, பிடெக்,எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி (Integrated Course - 5 years), எம்எஸ்சி (கணிதம்) உள்ளிட்ட படிப்பை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பிஇ, பிடெக், எம்இ, எம்டெக்கை பொறுத்தமட்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், இசிஇ, ஐடி, ட்ரிபிள் இ, டேட்டா சயின்ஸ்/ஆர்ட்டிபிரியல் இன்டெலிஜன்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் , எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்த படிப்புகளை 10, பிளஸ் 2 முடித்து முடித்திருக்க வேண்டும். கல்லூரி படிப்பில் 6 சிஜிிஏ அல்லது 60 சதவீதம் இருக்க வேண்டும். Post Graduation என்றால் 6சிஜிபிஏ அல்லது 68 சதவீதம் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியா விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.

அதேபோல், விண்ணப்பம் செய்வோர் 3 வகையான இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. முதலில் ஆன்லைனில் இண்டர்வியூ இருக்கும். அதன்பிறகு நேரடி இண்டர்வியூ. பிறகு எச்ஆர் உடன் சந்திப்பு இருக்கலாம்.
இதில் ஆன்லைன் இண்டர்வியூவில் 3 புரோகிராமை தந்து கோடிங் எழுத வைப்பார்கள். அதில் திறமையை பார்த்து ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர், ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications