டிகிரி - இன்ஜினியரிங் போதும்.. அழைக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம்.. சென்னையிலேயே பணி நியமனம்
சென்னை: இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் இன்ஃபோசிஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்கள் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் மற்றும் மெயின்டெனன்ஸ் பிரிவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இன்ஜினியரிங், டிகிரி என்றால் பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்சிஏ, எம்டெக், எம்எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதுதவிர டெக்னிக்கல் ஸ்கில்ஸ்ஸாக Technology->Java->Springboot தெரிந்திருக்க வேண்டும்.
அதோடு கூடுதலாக Architecture மற்றும் டிசைன் ஃபண்டமென்டல்ஸ் தெரிந்திருக்க வேண்டும். டெஸ்ட்டிங் டூல்ஸ், Agile மெத்தடாலஜிஸ், ஆங்கிலத்தில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். புதிய டெக்னாலஜிஸ் பற்றிய புரிதல் இருப்பதோடு, பிரச்சனைகளை தீர்ப்பது, அனலிட்டிக்கல் மற்றும் டீபக்கிங் ஸ்கில்ஸ் (Debugging Skills) இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இது பற்றி கடைசி கட்ட இண்டர்வயூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்தால் நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications