Infosys நிறுவனத்தில் ஏராளமான வேலை.. B.E, B.Tech, B.Sc முடித்தோருக்கு செம சான்ஸ்.. பெங்களூரில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பிஇ, பிடெக், பிஎஸ்சி, எம்டெக், எம்இ, எம்எஸ்சி படிப்பை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணி குறித்த பிற விவரங்கள் வருமாறு:

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் (Infosys) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது Oracle Intergration Coud Developer (OIC) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Infosys hiring for Oracle Intergration Cloud Developer role in Bangalore

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், பிஎஸ்சி, எம்டெக், எம்இ, எம்எஸ்சி உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். அதேபோல் விண்ணப்பம் செய்வோர் ஆரக்கள் மிடில்வார் டெக்னாலஜியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஏபிஐ டிசன் மற்றும் மேனேஜ்மென்ட் பிரின்சிபிள், கிளவுட் செக்யூரிட்டி (Cloud Security) உள்ளிட்டவை பற்றி அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆரக்கள் டேட்டா இன்டிகிரேட்டர் டூலை பயன்படுத்தி டேட்டா மேப்பிங் மற்றும் டிரான்ஸ்ஃபார்மேஷன் டெக்னிக்ஸ் பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

SQL Queries மற்றும் Oprimzation Techniques தெரிந்திருபதோடு ஸ்கிரிப்ட்டிங் லேங்குவேஜஸ்களான shell அல்லது பைத்தான் தெரிந்திருக்க வேண்டும். ஓஐசிக்கான DevOps தெரிந்திருக்க வேண்டும். எஸ்டிஎல்சி, REST/SOAP வெப் சர்வீசஸ் டெவலப்மென்ட் மற்றும் புரோட்டோகால்ஸ் தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டிசைன் பிரின்சிபிள் மற்றுமு் ஆர்க்கிடெக்ட்ச்சர் கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்டபிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின் படி பணிக்கான சம்பளம் பற்றி தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. எனவே விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+