BE, BTech, B.Sc முடித்தோருக்கு அசத்தலான வேலை.. விண்ணப்பிக்க ரெடியா? செம சான்ஸ்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் சார்பில் புதிய வேலைாவய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி, எம்டெக், எம்இ, எம்எஸ்டி படிப்பை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணி குறித்த பிற விவரங்கள் வருமாறு:
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் (Infosys) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் Oracle VBCS Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், பிஎஸ்சி, எம்டெக், எம்இ, எம்எஸ்சி உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஆரக்கள் புராடக்ட்டில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வெப் டெவலப்மென்ட் (எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட்) பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் 2 - 3 ஆண்டுகள் வரை ஆரக்கள் விபிசிஎஸ் (Oracle VBCS) அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Cloud Technologies-யை பொறுத்தவரை Saas, OIC மற்றும் ஆரக்கள் கிளவுட் டேட்டாபேஸ் இன்டகிரேஷன் மற்றும் அட்வான்டேஜிஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் வெப் சர்வீசஸை பொறுத்தவரை REST மற்றும் SOAP வெப் சர்வீசஸ் தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெவலப்மென்ட் மெத்தடாலஜிஸை எடுத்து கொண்டால் Agile தெரிந்திருக்க வேண்டும்.
இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். தனியாகவும், டீமாகவும் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். கிளைண்ட்டுகளை எதிர்கொள்வது, கஸ்டமர்களை கவரும் வகையிலான பேச்சு இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. எனவே விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் புனேவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications