மலேசியாவில் வேலை.. கை நிறைய சம்பளம்! வழிகாட்டும் தமிழக அரசு! பிளைட் டிக்கெட்.. விசா எல்லாம் ஃப்ரீ..!
சென்னை: மலேசியாவில் Construction Worker, Construction (Helper) மற்றும் Welder ஆகிய பணிகளுக்கான தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ள நிலையில், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மலேசியாவில் Construction Worker, Construction (Helper) மற்றும் Welder ஆகிய பணிகளுக்கான தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது.

இதற்காக ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," மலேசியாவில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் படித்துள்ள, பணி அனுபவம் அல்லது பணி அனுபவம் இல்லாத 50 வயதிற்கு 2 Construction Worker, Construction (Helper) மற்றும் Welder தேவைப்படுகிறார்கள். Construction Worker ஆகிய பணிக்கு ரூ.50,000/- ஊதியமாகவும் Construction (Helper) ரூ.28,000/- ஊதியமாகவும் வழங்கப்படும்.
வெல்டர் பணிக்கு welder qualiing test சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.40,000/- வழங்கப்படும். மேலும், உணவு, இருப்பிடம் விமானப் பயணச்சீட்டு மற்றும் விசா வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 03/08/2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜண்டுகளோ எவரும் இல்லை. ஆகவே விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்." என கூறப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications