திரைப்படத்துறையில் ஆர்வமா? மாஸ் கம்யூனிகேஷன் படித்திருந்தால் போதும்! ரூ.70,000 சம்பளத்தில் வேலை ரெடி
சென்னை: தேசிய திரைப்படத்துறையில் 14 காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கு மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படித்திருந்தால் போதுமானதாகும். ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து தேசிய திரைப்படத்துறை விண்ணப்பங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படங்களை ஊக்குவிப்பது இந்த துறையின் பணியாகும். கடந்த 1975ம் ஆண்டிலிருந்து இந்த துறை இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த துறையில் Consultant, Junior Programmer, Coordinator, Executive, Sr. Executive, Assistant Programming Coordinator, Registration Jr. Executive, Editor/Assistant Programming Coordinator ஆகிய பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நேஷனல் ஃபிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NFDC) அறிவித்துள்ளது.

இதில் மொத்தம் 14 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (24.08.2023) கடைசி நாளாகும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate in Mass Communication/Film Studies/Humanities/ Graduate/Post Graduate, Degree/Diploma in Social Media Marketing/Social Media Management, Degree in Marketing/Branding, Diploma in Communication Studies/Mass Communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக இந்த பணிக்கு அனுபவம் மிகவும் முக்கியமானதாகும். எனவே விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 2 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://nfdcindiant.samarth.edu.in/index.php/site/login எனும் வெப்சைட்டுக்கு சென்று லாக்-இன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் ஏற்கெனவே அக்கவுன்ட் இல்லையெனில் விண்ணப்பதாரர்கள் தங்களது மெயில் ஐடி மற்றும் மொபைல் எண் கொடுத்து லாக் இன் செய்துக்கொள்ளலாம். இதன் மூலம் புதிய பாஸ்வேர்டை உருவாக்கி லாகின் செய்ய முடியும். இதில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணபிக்கும்படி NFDC அறிவுறுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications