மத்திய அரசு நிறுவனத்தில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்.. செம சான்ஸ்!
சென்னை: இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 394 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெக்னீஷியன், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களானது நிரப்பப்படுகிறது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், இன்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நாட்டின்ன் மிகப்பெரிய அரசுத் துறை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இருந்து வருகிறது. கடந்த 1959 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவில் எரிபொருள் உற்பத்தி, சுத்திகரிப்பு (refining), விநியோகம் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளில் முன்னணியில் இருந்து வகிக்கிறது.

பணியிடங்கள் விவரம்:
பெட்ரோல், டீசல், LPG, ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு எரிசக்தி தயாரிப்புகளை நாடு முழுவதும் விநியோகித்தும் வருகிறது. இந்த நிறுவனத்தில் தான் தற்போது வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்க முடியும் என்ற விவரங்களை பார்க்கலாம்.
* டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேஷன் & இன்ஸ்ட்ரூமென்டேஷன்),
* டிரேட் அப்ரண்டிஸ் (அசிஸ்டென்ட்-ஹியூமன் ரிசோர்ஸ், அக்கவுண்டன்ட்),
* டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (புதிய பயிற்சிப் பணியாளர்கள்)
* டொமஸ்டிக் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (திறனாய்வுச் சான்றிதழ் பெற்றவர்கள்) ஆகிய பிரிவுகளில் மொத்தம் 394 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
மண்டல வாரியான காலியிட விவரங்கள்:
கிழக்கு மண்டல குழாய்வழிப் பிரிவுகளில் அஸ்ஸாம் (10), பீகார் (21), ஜார்கண்ட் (03), உத்திரபிரதேசம் (29), மேற்கு வங்கம் (38) ஆகிய மாநிலங்களில் காலியிடங்கள் உள்ளன. மேற்கு மண்டல குழாய்வழிப் பிரிவுகளில் குஜராத் (77), மத்தியப் பிரதேசம் (05), மகாராஷ்டிரா (12), ராஜஸ்தான் (42) ஆகிய மாநிலங்களில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மண்டல குழாய்வழிப் பிரிவுகளில் டெல்லி (07), ஹரியானா (11), இமாச்சலப் பிரதேசம் (04), பஞ்சாப் (19), ராஜஸ்தான் (03), உத்திரப்பிரதேசம் (08), உத்தராகண்ட் (02) காலியிடங்கள் உள்ளன. தெற்கு மண்டல குழாய்வழிப் பிரிவுகளில் ஆந்திரப் பிரதேசம் (02), கர்நாடகா (05), தமிழ்நாடு (33) ஆகிய மாநிலங்களில் பயிற்சிப் பணிகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. தென் கிழக்கு மண்டல குழாய்வழிப் பிரிவுகளில் ஆந்திரப் பிரதேசம் (14), சத்தீஸ்கர் (05), ஜார்கண்ட் (02), ஒடிசா (37), தெலங்கானா (05) ஆகிய மாநிலங்களில் காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பு, டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணிக்கு குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
31.01.2026 தேதிப்படி குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 24 வயதும் நிரம்பியவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
(SC/ST) 5 வருடங்கள், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், PwBD (பொது/EWS) பிரிவினருக்கு 10 வருடங்கள், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 வருடங்கள், PwBD (OBC) பிரிவினருக்கு 13 வருடங்கள் தளர்வுகள் அளிக்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியும், திறமையின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுப்பவர்கள் ஒரு ஆண்டுக்கு மட்டுமே பணியில் அமர்த்தப்படுவர்கள். டிரேட் அப்ரண்டிஸ் (DEO) பிரிவுக்கு apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திலும், டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பிரிவுக்கு nats.education.gov.in/student_register.php என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வரும் 28 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 10, 2026 ஆகும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: iocl.com/apprenticeships
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications