மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.1.20 லட்சம் வரை சம்பளம்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியர் / அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளது.

iocl-junior-engineer-officer-recruitment-2025-1-20-lakh-salary-online-applications-open

பணியிடங்கள் விவரம்:

இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இதன் துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஜூனியர் இன்ஜினியர் / அதிகாரி (வேதியியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமண்டேஷன்) உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எத்தனை பணியிடங்கள் என்பது பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

கல்வித் தகுதி என்ன?

இந்த காலிப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதியைப் பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

வயது வரம்பு, சம்பளம் எவ்வளவு?

26 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்சவரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.30,000 - ரூ.1,20,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

CBT எனப்படும் கணினி வழியிலான தேர்வு நடைபெறும். குழு விவாதம் மற்றும் குழு பணிகள், நேர்முகத் தேர்வு ஆகியவையும் நடைபெறும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://iocl.com/ என்ற இணையதளத்தில் சென்று தேர்வு அறிவிப்பினை படித்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வரும் 28.09.2025 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/5531e02585524021bf2703f52b045015.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+