மிஸ் பண்ணிடாதீங்க.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பு.. சூப்பர் சம்பளம்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா.. எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.
டெல்லி: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் (iocl) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் மார்ச் 20ம் தேதிக்குள் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineering Assistant (இளநிலை பொறியியல் உதவியாளர் ) , Junior Quality Control Analyst, Junior Engineering Assistant(Group IV), Junior Nursing Assistant (Group IV) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரத்தை பாருங்கள்.
என்ன வேலை : இளநிலை பொறியியல் உதவியாளர் (Group IV)
மொத்த பணியிடங்கள்: 465
மாத சம்பளம் எவ்வளவு : மாதம் ரூ.25,000 - 1,05,000
எத்தனை வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்: 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் மற்றும் கண்ரோல் போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தகுதி என்ன
என்ன வேலை: ஜூனியர் தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் (குரூப் IV) (Junior Quality Control Analyst(Group IV) )
மொத்த பணியிடங்கள்: 29
மாத சம்பளம் எவ்வளவு: மாதம் ரூ.25,000 -1,05,000
எத்தனை வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்: 18 முதல் 26 க்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: இயற்பியல், வேதியியல், தொழிலக வேதியியல், கணிதம் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.

வயது என்ன
என்ன வேலை: இளைய பொறியியல் உதவியாளர் (குரூப் IV) (தீ மற்றும் பாதுகாப்பு) ( Junior Engineering Assistant(Group IV) (Fire and Safty) )
மொத்த பணியிடங்கள்: 14
மாத சம்பளம் எவ்வளவு: மாதம் ரூ.25,000 - 1,05,000
எத்தனை வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்: 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தீ மற்றும் பாதுகாப்புப்பிரிவில் துணை அலுவலர் பயிற்சி முடித்திருப்பதுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 165 செ.மீட்டர் உயரமும், 50 கிலோ எடையுடன், மார்பக அளவு சாதாரண நிலையில் 81 செ.மீ. அகலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ அகலம் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
என்ன வேலை: ஜூனியர் மெட்டீரியல் அசிஸ்டென்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (குரூப் -IV) (Junior Material Assistant,Junior Technical Assistant(Group -IV)
மொத்த பணியிடங்கள்: 4
மாத சம்பளம் எவ்வளவு: மாதம் ரூ.25,000 - 1,05,000
எத்தனை வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்: 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

எத்தனை இடம்
என்ன வேலை : ஜூனியர் நர்சிங் உதவியாளர் (குரூப் IV)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 1,05,000
வயது வரம்பு: 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

கடைசி தேதி
விண்ணப்பிக்கும் நபர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவங்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.150. இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது: www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.03.2023












Click it and Unblock the Notifications