நோ எக்ஸாம்.. மாதஊதியம் ரூ.36,000.. ரயில்வே துறையில் சூப்பர் வேலை.. தமிழகத்திலும் பணி செய்ய வாய்ப்பு
சென்னை: இந்தியன் ரயில்வே துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஐஆர்சிஓஎன் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணியில் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.36 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்திய ரயில்வேயின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் ரயில்வே சேவையை பிரச்சனையின்றி மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான பணிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தான் ஐஆர்சிஓஎன்(IRCON) என அழைக்கப்படும் இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி(Indian Railway Construction Limited) செயல்பட்டு வருகிறது.

காலியிடங்கள் எத்தனை?
இந்த நிறுவனத்துக்கு தற்பாது தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா உள்பட பல இடங்களில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகின்றனர். இதனால் Works Engineer பணிக்கு ஆட்சேர்ப்பு நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 34 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி சிவில் பிரிவில் 31 பணியிடங்கள், எலக்ட்ரிக்கல் பிரிவில் 2 பணியிடங்கள், எஸ் அன்ட் டி பிரிவில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு-மாத சம்பளம் என்ன?
விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறிப்பிட்ட துறையில் என்ஜியனீரியங் படிப்பை முடித்திருப்பதோடு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலானது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.36 ஆயிரம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்க்காணல் எப்போது?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 17 ம் தேதி முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை நடக்கும் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். பிற மாநிலங்களில் பணி பெற விரும்போர் அதற்கான நேர்க்காணலில் குறித்த முகவரில் பங்கேற்க வேண்டும். நேர்க்காணல் தேதி, நேரம் குறித்த முழுவிபரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து பயனடையலாம்.

தமிழக பணிக்கான நேர்க்காணல்
மாறாக தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகாவில் பணி பெறுவதற்கான நேர்க்காணல் ஏப்ரல் மாதம் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நேர்க்காணல் IRCON Southern Regional OfficeB2-318, III Floor, ThungabadraBlock, National Games Village, Kormangala, Bengaluru-560047 என்ற முகவரியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications