நோ எக்ஸாம்.. நேர்க்காணல் மட்டுமே.. மாதம் ரூ.30,000 சம்பளம்.. ஐஆர்சிடிசி-யில் அசத்தலான வேலை!
சென்னை: இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியில் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் நேரடியாக ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படுவதோடு, பணி நாட்களில் தினசரி அலோவன்ஸாக ரூ.300 வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக ரயில்வே செயல்பட்டு வருகிறது. இதில் ஐஆர்சிடிசி எனும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (Indian Railway Catering and Tourism Corporation or IRCTC) என்பது இந்திய ரயில்வேக்கு டிக்கெட், கேட்டரிங் மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்கி வருகிறது.
பொதுத்துறை நிறுவனமான உள்ள இந்த ஐஆர்சிடிசியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: ஐஆர்சிடிசியில் ஹாஸ்பிட்டாலிட்டி மானிட்டர்ஸ் (Hospitality Monitors) பிரிவில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பிஎஸ்சி என்றால் ஹாஸ்பிட்டாலிட்டி ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். பிபிஏ மற்றும் எம்பிஏ ஆகிய படிப்புகளில் Culinary Arts, டூரிசம் மற்றம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பிரிவுகளில் படிப்புகளை முடித்தவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வு உண்டு. பணிக்கு தேர்வாகும் நபர்களுக் மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர பணி நாளில் ரூ.350 அலோவன்ஸ் தொகையாக வழங்கப்படும்.
தேர்வாகும் நபர்கள் ராஜஸ்தான், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு கிடையாது. மாறாக நேரடியாக நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பயோடேட்டா, உரிய சான்றிதழ்களுடன் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் Institute of Hotel Management (IHM), IHMCTAN, Veer Savarkar Marg, Dadar (W), Mumbai 400 028 என்ற முகவரியில் 11ம் தேதி நேர்க்காணல் நடக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில்Institute of Hotel Management (IHM) - Bhopal Near Academy of Administration, 1100 Quarters, Arera Colony, Bhopal, Madhya Pradesh 462016 என்ற முகவரியல் 14ம் தேதியும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள Institute of Hotel Management (IHM) - Ahmedabad Between Koba Circle & Infocity Road, Bhaijipura Patia, P.O. Koba, Gandhinagar, Gujarat - 382426 என்ற முகவரியில் ஜூலை 19ம் தேதியும் நேர்க்காணல் என்பது நடைபெற உள்ளது.
நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் www.irctc.com இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு நேர்க்காணலில் பங்கேற்கலாம். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2 ஆண்டுகள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அதன்பிறகு ஒரு ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு-விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications