ரூ.68,000 வரை சம்பளம்.. 12, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு சூப்பர் வேலை.. அழைக்கும் ஐஆர்இஎல்
சென்னை: மத்திய அரசின் ஐஆர்இஎல் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.68 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் பணியை பெறலாம்.
மத்திய அரசின் அணு சக்தி துறையின் கீழ் ஐஆர்இஎல் (Indian Rare Earths Limited) எனும் நிறுவனம் மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் ஆலைகள் உள்ளன.
இந்த நிறுவனத்தின் Mineral Sand Mining and Mineral Processing Plants கேரளாவின் சாவரா, தமிழ்நாட்டின் மனவாளகுறிச்சி, ஒடிசா உள்ளிட்ட இடங்களில் ஆலைகள் உள்ளன. இந்நிலையில் தான் ஐஆர்இஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலியிடங்கள்: ஐஆர்இஎல் நிறுவனத்தில் ஜூனியர் ராஜபக்சா அதிகாரி பணிக்கு 4 பேர், ஜூனியர் சூப்பர்வைசர், மைனிங் மேட் பணிக்கு தலா 8 பேர், மைனிங் சர்வேயர் பணிக்கு ஒருவர், மைனிங் போர்மேன் பணிக்கு 4 பேர், சூப்பர்வைசர், கிராசூவேட் டிரெய்னி பணிக்கு 7 பேர், டிப்ளமோ டிரெய்னி பணிக்கு 37 பேர், டிரெய்னி பணிக்கு 8 பேர், டிரெய்னி கெமிஸ்ட் பணிக்கு 4 பேர் என மொத்தம் 88 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: ஜூனியர் ராஜபக்சா அதிகாரி பணிக்கு ஆங்கிலம், இந்தியில் இளங்கலை, மாஸ்டர் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜூனியர் சூப்பர்வைசர் பணிக்கு டிப்ளமோ, டிகிரியில் கெமிஸ்ட்ரி, டிகிரி முடித்திருக்க வேண்டும். மைனிங் மேட் பணிக்கு 12ம் வகுப்பு, மைனிங் சர்வேயர் பணிக்கு டிப்ளேமா மைன்ஸ் சர்வே/மைனிங் என்ஜினீயரிங், மைனிங் போர்மேன் பணிக்கு டிப்ளமோ மைனிங், சூப்பர்வைசர் பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல், சிவில் படிப்பையும், முதுகலை படிப்பையும் எம்காம் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். கிராசூவேட் டிரெய்னி, டிரெய்னி பணிக்கு டிகிரி, டிப்ளமோ டிரெய்னி, டிரெய்னி கெமிஸ்ட் பணிக்கு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஜூனியர் ராஜபக்சா அதிகாரி, ஜூனியர் சூப்பர்வைசர், மைனிங் மேட், மைனிங் சர்வேயர் பணிக்கு அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும், மைனிங் போர்மேன், சூப்பர்வைசர் பணிக்கு 33 வயதுக்குள்ளும், கிராசூவேட் டிரெய்னி, டிப்ளமோ டிரெய்னி, டிரெய்னி, டிரெய்னி கெமிஸ்ட் பணிக்கு 26 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினர் என்றால் 10 வயது வரையும் 15 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.
மாத சம்பளம்: ஜூனியர் ராஜபக்சா அதிகாரி, ஜூனியர் சூப்பர்வைசர், மைனிங் மேட், மைனிங் சர்வேயர் பணிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.68 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. மைனிங் போர்மேன், சூப்பர்வைசர் பணிக்கு மாதம் ரூ.26,500 முதல் ரூ.72 ஆயிரம் வரை வழங்கப்படும். கிராசூவேட் டிரெய்னி, டிப்ளமோ டிரெய்னி, டிரெய்னி, டிரெய்னி கெமிஸ்ட் பணிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.68 ஆயிரம் வரை மாதசம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் 14ம் தேதிக்குள் irel.co.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இடபிள்யூஎஸ், ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, இஎஸ்எம் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு/டிரேட் தேர்வு, கம்ப்யூட்டர் ப்ரோபிசியென்சி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர்வைசர் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
சூப்பர்வைசர் டிரெய்னி தொடர்பான பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications