ISRO Job: இஸ்ரோவில் வேலை.. நெல்லையிலேயே பணியிடம்.. டிகிரி முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள இஸ்ரோ உந்துவிசை (Propulsion) அமைப்பை ஒருங்கிணைக்கும் மையத்தில் தான் தற்போது அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள், என்.ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பின் கீழ் வரும் மத்திய அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுத் துறையின் கீழ் செயல்படும் இஸ்ரோ, உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கே போட்டி கொடுக்கும் அளவில் அசாத்திய சாதனைகளை செய்து வருகிறது.

நெல்லையில் பணியிடம்
இஸ்ரோவில் வேலை பார்த்து நாட்டை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையினர் மத்தியில் இருக்கும். இஸ்ரோ உந்துவிசை (Propulsion) அமைப்பை ஒருங்கிணைக்கும் மையம் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இதில்தான் தற்போது அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
பட்டதாரி பயிற்சி பணியிடங்கள் (Engineering)
மெக்கானிக்கல் என்ஜினியரிங் - 12
எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் - 10
எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் - 05
சிவில் என்ஜினியரிங் - 04
Instrumentation என்ஜினியரிங் - 03
கெமிக்கல் என்ஜினியரிங் - 02
கணினி அறிவியல் பொறியியல் - 05
பட்டதாரி பயிற்சி (பொறியியல் அல்லாதது)
பி.ஏ - 04
பி.எஸ்.சி - 07
பி.காம் - 04
தொழில்நுட்ப பயிற்சி:
மெக்கானிக்கல் பொறியியல் - 15
மின்னணு பொறியியல் - 10
மின் பொறியியல் - 10
சிவில் பொறியியல் - 05
வேதியியல் பொறியியல் - 04
கல்வித் தகுதி:
டிப்ளமோ, பி.இ / பி.டெக், பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் ஆகிய படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை, பட்டதாரி அப்ரெண்டீஸ் பணிக்கு 28 வயது வரையும், டெக்னிஷியன் அப்ரெண்டீஸ் பயிற்சிக்கு 35 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு:
டிகிரி கல்வித் தரம் (பொறியியல்) - ரூ.9000/-
டெக்னிஷியன் - ரூ.8000/-
தேர்வு முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வாளர்கள் நேரடியாக செல்லலாம்.
நேர்காணல் தேதி:
பட்டதாரி அப்ரெண்டீஸ் (பொறியியல்): 10.01.2026 அன்று காலை 09:30 முதல் மதியம் 12:00 வரை
டெக்னிஷியன் அப்ரெண்டீஸ்: 10.01.2026 அன்று மதியம் 02:00 முதல் மாலை 04:00 வரை
டிகிரி அப்ரெண்டீஸ் (பொறியியல் அல்லாதது): 11.01.2026 அன்று காலை 09:30 முதல் மதியம் 12:00 வரை
தேர்வு அறிவிப்பை படிக்க:
https://www.iprc.gov.in/files/general/Apprentice_Walk-in-Interview_Advertisement.pdf
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications