இஸ்ரோவில் விஞ்ஞானி ஆக ஆசையா? 175 காலியிடங்கள்.. பிஇ, பிடெக் முடித்தவர்களுக்கு யோகம்
சென்னை: இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சயிண்டிஸ்ட் என்ஜினியர் பிரிவில் பல்வேறு பதவிகளில் மொத்தம் 175 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பிஇ, பிடெக் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்ற விவரங்களை இங்கு காணலாம்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செயற்கைகோள்களை ஏவுவது விண்வெளி ஆய்வு போன்றவற்றில் ஈடுபட்டு வரும் இஸ்ரோ, உலக அளவில் விண்வெளித்துறையில் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக வைத்து இருப்பதில் முதன்மையான பங்கு வகிக்கிறது.

அப்படிப்பட்ட இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்து விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை வேலை தேடும் பலருக்கும் இருக்கும்.. போட்டி தேர்வர்களின் இந்த கனவை நனவாக்கும் வகையில் சூப்பர் அறிவிப்பு ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
சயிண்டிஸ்ட் என்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ்) - 99
சயிண்டிஸ்ட் என்ஜினியர் (மெக்கானிக்கல்) -52
சயிண்டிஸ்ட் என்ஜினியர் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) - 21
சயிண்டிஸ்ட் என்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ்) - 01
சயிண்டிஸ்ட் என்ஜினியர் (மெக்கானிக்கல்) - பிஆர்.எல்)- 01
சயிண்டிஸ்ட் என்ஜினியர் (Computer Science) - 01
என மொத்தம் 175 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி:
பிஇ/ பிடெக் முடித்த்தவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவை மேஜர் பாடமாக எடுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதாவது எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பிரிவு பணிக்கு அதே பாடத்தை எடுத்து படித்து இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவு இல்லாமல் எடுத்து இருப்பது அவசியம் ஆகும்.
வயது வரம்பு:
16.09.2026 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 28 வயது அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சிஒ/எஸ்டி உள்ளிட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் சலுகைகள் வழங்கப்படும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.56,100 - 1,77,500 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை:
சிபிடி எனப்படும் கணிணி வழியிலான ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.750 திருப்பி அளிக்கப்படும்.. ஒபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு 500 ரூபாய் திருப்பி அளிக்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 16.09.2026 கடைசி நாளாகும்.


Click it and Unblock the Notifications
