இஸ்ரோவில் வேலை.. 63 பணியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு யோகம்.. இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 63 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.56 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, தேர்வு முறை எப்படி என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிலையமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இஸ்ரோ நிறுவனம் இயங்கி வருகிறது. இஸ்ரோவில் வேலை பார்க்க வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவுகளில் ஒன்றாக இருக்கும்.

isro-job-notification-2025-63-scientist-engineer-posts-how-to-apply-full-details-here

மத்திய அரசின் அமைப்பு என்பதால் இஸ்ரோவில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும். இந்த நிலையில்தான் இஸ்ரோவில் காலியாக உள்ளா 63 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. சயிண்டிஸ்ட்/ என்ஜினியர் - எலக்ட்ரானிக்ஸ் - 22
2. சயிண்டிஸ்ட்/ என்ஜினியர் - மெக்கானிக்கல் - 33
3. சயிண்டிஸ்ட்/ என்ஜினியர் - (கணினி அறிவியல்) - 08

கல்வி தகுதி:

* எலக்ட்ரானிக்ஸ் பணியிடத்திற்கு பிஇ/பிடெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் என்ஜினியரிங் பிரிவில் பிடெக் முடித்து இருக்க வேண்டும். 65 சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். கேட் தகுதி மதிப்பெண்கள் அவசியம்.

* மெக்கானிக்கல் பணியிடத்திற்கு பிஇ/ பிடெக் அல்லது மெக்கானிக்கல் என்ஜினியரிங்கிற்கு நிகரான படிப்புகள் முடித்து இருக்க வேண்டும். அனைத்து செமஸ்டர்களும் 65 சதவீத மதிப்பெண்கள் அவசியம். மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் தகுதியான கேட் மதிப்பெண்கள் அவசியம்.

* கம்ப்யூட்டர் சயின்ஸ் பணிக்கு பிஇ /பிடெக் பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுக்கு நிகரான படிப்புகள் முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

19.05.2025 - தேதிப்படி தேர்வர்கள் 28 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 56,100 சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கேட் 2024 அல்லது கேட் 2025 மார்க்குகள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி / எஸ்டி மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.isro.gov.in/ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 19.05.2025- கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2025_April/Advt_EMC_2025GATEWebsiteAdvertisementBilingual.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+