இஸ்ரோவில் 69,000 சம்பளத்தில் வேலை.. 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. தேதி முடிய போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் LPSC மையத்தில் காலியாக உள்ள டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 10 ஆம் கல்வி தகுதியுடன், ஐடிஐ முடித்தவர்கள், டிரைவிங் லைசன்ஸ் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 10 ஆம் தேதி தான் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு சொந்தமான திரவ உந்து அமைப்பு மையத்தில் (Liquid Propulsion Systems Centre) காலியாக உள்ள 30 டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் கல்வி தகுதியுடன், ஐடிஐ முடித்தவர்கள், டிரைவிங் லைசன்ஸ் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு என்ன? எப்படி விண்ணப்பிப்பது? என்பது உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.

job isro employment

பணியிடங்கள் விவரம்:
வெல்டர் - 01 பணியிடங்கள்
டர்னர் - 01
எலக்ட்ரானிக் மெக்கானிக் - 02
டெக்னிக்கல் அசிஸ்டண்ட் மெக்கானிக்கல் - 10
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (எலக்ட்ரிக்கல்) - 01
மெக்கானிக் ஆட்டோ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 01

கனரக வாகன ஓட்டுநர் 'ஏ' - 05
இலகுரக வாகன ஓட்டுநர் 'ஏ' - 02
ஃபிட்டர் - 05
மெஷினிஸ்ட் - 01
சமையல்காரர் - 01
என மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

மத்திய அரசு வேலை.. 39,481 பணியிடங்கள்.. 10ம் வகுப்பு தகுதி + 69,000 சம்பளம்! எஸ்எஸ்சி மெகா அறிவிப்பு
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் தொழிற்பயிற்சி முடித்திருத்தல் அவசியம். சமையலர் பணிக்கு 10 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். கனரக வாகன ஓட்டுநர் பணிக்கு ஹெவி லைசன்ஸ் உடன் 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம். இலகுரக டிரைவர் பணிக்கு எல்.எம்.வி லைசன்ஸ் அவசியம். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம் ஆகும்.

வயது வரம்பு & சம்பளம்: அனைத்து பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பணி அனுபவம் அவசியம். பணிக்கேற்ப சம்பளம் மாறுபடும். அதிகபட்சமாக ரூ. 69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை டெக்னிஷியன் பணியிடங்களுக்கு ரூ.750 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.500 ரிஃபண்ட் செய்யப்படும். எஸ்.சி/எஸ்.டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும். டெக்னிக்கல் அல்லாத பிற பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 500 ஆகும். அவர்களுக்கு 400 ரூபாய் திருப்பி தரப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 27.08.204 அன்று தொடங்கியது. விண்ணப்பிக்க வரும் 10.09.2024 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ள https://www.lpsc.gov.in/noticeresult.html#Demo2 என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+