ரெடியா? கைநிறைய சம்பளம்..10ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்களை அழைக்கும் இஸ்ரோ!
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் இஸ்ரோவில் காலியாக உள்ள 224 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள், டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் இஸ்ரோ (ISRO) எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இஸ்ரோ செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் விண்வெளி திட்டங்களை செயல்படுத்துவதை இஸ்ரோ பணியாக வைத்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: இஸ்ரோவில் தற்போது டிராட்ஸ்மேன் (Draughtsman) மற்றும் டெக்னீசியன் பிரிவில் மொத்தம் 224 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி சயின்டிஸ்ட் என்ஜினீயர் (001 மற்றும் 002) பணிக்கு 3 பேர், சயின்டிஸ்ட் என்ஜினீயர் (003 மற்றும் 004) பணிக்கு 2 பேர், டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 55 பேர், சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு 6 பேர், லைப்ரேரி அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர், டெக்னீசியன் - பி மற்றும் டிராப்ட்ஸ்மேன் பணிக்கு 142 பேர், ஃபயர்மேன் - ஏ (Fireman - A) பணிக்கு 3 பேர், சமையல் (Cook) பணிக்கு 5 பேர், லைட் வாகன டிரைவர் (Heavy Vehicle Driver) 6 பேர் என மொத்தம் 224 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: சயின்டிஸ்ட் என்ஜினீயர் பணிக்கு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்எஸ்சி, பிஎஸ்சி, எம்எஸ்சி, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ என்ஜினீயரிங், சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு பிஎஸ்சி, லைப்ரரி அசிஸ்டென்ட் பணிக்கு மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதேபோல் டெக்னீசியன் - பி மற்றும் டிராப்ட்ஸ்மேன் பணிக்கு 10ம் வகுப்பு, ஐடிஐ, ஃபயர்மேன் - ஏ, சமையல், லைட் வாகன டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியை பொறுத்து வயது வரம்பு என்பது மாறுபடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதசம்பளம்: சயின்டிஸ்ட் என்ஜினியர் பணிக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 500 வரை வழங்கப்படும். டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சயின்டிபிக் அசிஸ்டென்ட், லைப்ரரி அசிஸ்டென்ட் பணிகளுக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை சம்பளம் என்பது வழங்கப்படும். டெக்னீசியன், டிராட்ஸ்மேன் பணிக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். ஃபயர்மேன், சமையல் தொழிலாளி, டிரைவர் பணிக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in இணையதளம் மூலம் பிப்ரவரி மாதம் 16ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications