இஸ்ரோவில் பணியாற்ற ஆசையா? 10ம் வகுப்பு, ஐடிஐ தகுதி தான்.. 1.77 லட்சம் வரை சம்பளம்! தேதி முடிய போகுது
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் வேலைவாய்ப்பு (ISRO JOB) அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ எம்.இ. முடித்தவர்களுக்கும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கடந்த மாதமே விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கியதால் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சான்ஸை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், விண்வெளித் துறையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு சவால் விடுக்கும் வகையில் உலக அரங்கில் பெருமைகளை சேர்த்து வருகிறது. இந்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் இஸ்ரோவில் வேலை பார்க்க வேண்டும் என்பது தேர்வர்களின் விருப்பமாக இருக்கலாம்.

இஸ்ரோவில் வேலை
தற்போது இஸ்ரோவில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தம் 141 பணியிடங்களை நிரப்ப இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாள் ஆகும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் - 126
* டிரைவர் - 03
* நர்ஸ் - 01
* சமையலர் - 03
* ஃபயர் மேன் - 06
* வரைவாளர் - 01
* டெக்னீஷியன் B (கணினி அறிவியல்) - 01 என மொத்தம் 141 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ பிஎஸ்சி, பி.இ, பி.டெக், எம்.இ. எம்.டெக் முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி குறித்து முழு விவரங்களை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்தவர்கள் தெரிந்துகொள்ளலாம். டிரைவர் பணியிடத்திற்கு இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்து இருப்பது கட்டாயம் ஆகும்.
வயது வரம்பு:
இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். சயிண்டிஸ்ட் / என்ஜினியர் (மெஷின் டிசைன்) உள்ளிட்ட சில பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். தேர்வர்கள் வயது வரம்பு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படித்து உறுதி செய்து கொள்ளவும்.
சம்பளம் எவ்வளவு?
* சயிண்டிஸ்ட் / என்ஜினியர்: ரூ.56,100 - ரூ.1,77,500/-
* நர்ஸ் 'B' - லெவல் 7: ரூ.44,900 - ரூ.1,42,400/-
* டெக்னிக்கல் அசிஸ்டண்ட்: ரூ.44,900 - ரூ.1,42,400/-
* ஃபயர்மேன்: ரூ.19,900 - ரூ.63,200/-
* டிரைவர்: ரூ.19,900 - ரூ.63,200/-
* ரேடியோகிராபர்: ரூ.25,500 - ரூ.81,100/-
* டெக்னீஷியன் 'B' - லெவல் 3: ரூ.21,700 - ரூ.69,100/-
* சமையலர்: ரூ.19,900 - ரூ.63,200/-
பணி அமர்த்தப்படும் இடங்கள்
* தேர்வு செய்யப்படுவர்கள் செகந்திராபாத் (தெலுங்கானா), மகேந்திரகிரி (தமிழ்நாடு), ரசாயனி (மகாராஷ்டிரா), வலியமலா (கேரளா), திருவனந்தபுரம் (கேரளா), ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரப் பிரதேசம்), டேராடூன் (உத்தரகாண்ட்) ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னை, நெல்லை ஆகிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பிக்க நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையே (14.11.2025) கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://apps.shar.gov.in/sdscshar/advt_2025/Bilingual%20Advertisement%20for%20all%20posts%2016.10.2025.pdf
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications