நாட்டையே பெருமை படுத்தலாம்.. இஸ்ரோவில் வேலை பார்க்க ஆசையா? வந்தாச்சு அறிவிப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 320 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பி இ, பி.டெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளம் 56 ஆயிரம் வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும், எப்போது வரை விண்ணப்பிக்கலாம் போன்ற தகவல்களை இங்கு பார்க்கலாம்.

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளித்துறையில் சாதனை படைத்து வருகிறது இஸ்ரோ.

job ISRO Employment

இஸ்ரோவில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்பொது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது இஸ்ரோவில் காலியாக உள்ள 320 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள்:

விஞ்ஞானி / பொறியாளர் (எலக்ட்ரானிக்ஸ்) - 113
விஞ்ஞானி / பொறியாளர் (இயந்திரவியல்) - 160
விஞ்ஞானி / பொறியாளர் (CS) - 44
விஞ்ஞானி / பொறியாளர் (மின்னணுவியல்) - இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL) - 02
விஞ்ஞானி / பொறியாளர் (CS) - இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL) - 01


கல்வித் தகுதி:

பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.. துறை சார்ந்த பிரிவில் உள்ள பாடங்களை மேஜர் ஆக எடுத்து படித்து இருக்க வேண்டும். அதாவது, எலக்ட்ரானிஸ் பணியிடத்திற்கு எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் பி இ / பிடெக் முடித்து இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பு:

16.06.2025 அன்று தேதிப்படி 28 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது 33 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினர் என்றால் 31 வயது வரையும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் 38 வயது வரையும் விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் எவ்வளவு?

மத்திய அரசின் 7 வது ஊதிய கமிஷன் லெவல் 10-ன் படி சம்பளம் வழங்கப்படும். மாதம் ரூ.56,100-வரை சம்பளம் கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையம் சென்னையில் அமைக்கப்படும்.

தேர்வுக் கட்டணம்:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொண்ட பின்னர் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 திருப்பி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரரக்ள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் https://www.isro.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 16.06.2025 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2025_May/ICRBAdvt_BILINGUAL.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+